எனக்கு எப்போது திருமணம் நடைபெறும்? மூலம் நட்சத்திரம், செவ்வாய் தோஷம் இருப்பதால் காலதாமதம் ஆவதாகவும் சொல்கிறார்கள். எனக்கு செவ்வாய்தோஷம் இருக்கிறதா? திருமணம் காலதாமதம் ஆவதற்கு காரணம் என்ன? - வாசகர், கோயம்புத்தூர்

உங்களுக்கு விருச்சிக லக்னம், தனுசு ராசி. லக்னாதிபதி மற்றும் ஆறாம் வீட்டுக்கதிபதியான செவ்வாய்பகவான் எட்டாம் வீட்டில் குருபகவானின் சாரத்தில் அமர்ந்து முழுமையான சந்திர மங்கள யோகத்தைப் பெறுகிறார்.

உங்களுக்கு விருச்சிக லக்னம், தனுசு ராசி. லக்னாதிபதி மற்றும் ஆறாம் வீட்டுக்கதிபதியான செவ்வாய்பகவான் எட்டாம் வீட்டில் குருபகவானின் சாரத்தில் அமர்ந்து முழுமையான சந்திர மங்கள யோகத்தைப் பெறுகிறார். தன, பூர்வபுண்ணியாதிபதி ஸ்தானத்தில் வர்கோத்தமத்தில் இருக்கிறார். தற்சமயம் தசையை நடத்தும் பாக்கியாதிபதியான சந்திரபகவான் நவாம்சத்தில் உச்சம் பெற்றிருக்கிறார். உங்களுக்கு அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் திருமணம் கைகூடும். தொழில் ஸ்தானாதிபதி களத்திர, நட்பு ஸ்தானத்தில் லக்னாதிபதியின் சாரத்தில் அமர்ந்திருப்பதால் செய்தொழிலிலும் சிறப்பான வளர்ச்சி அடைவீர்கள். நீங்கள் செய்து வரும் தொழில் உங்கள் ஜாதகத்திற்கு ஏற்றதாக அமைகிறது. எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி திங்கள்கிழமைகளில் அம்மனை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com