என் மகன் அனிமேஷன் படிப்பு படித்து வருகிறான். வேலை வாய்ப்புக்கு அதிகம் சந்தர்ப்பம் இல்லை என்றே தோன்றுகிறது. வெளிநாடு சென்று மேலும் படிக்க ஜாதக ரீதியில் கிரகங்கள் உதவி செய்யுமா? பரிகாரம் ஏதும் செய்ய வேண்டுமா? - வாசகர், பெங்களூரு

உங்கள் மகனுக்கு துலா லக்னம், கும்ப ராசி, அவிட்டம் நட்சத்திரம். லக்னாதிபதி லாப ஸ்தானத்தில் அமர்ந்து பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் தொழில் ஸ்தானாதிபதியால் பார்க்கப்படுகிறார்.

உங்கள் மகனுக்கு துலா லக்னம், கும்ப ராசி, அவிட்டம் நட்சத்திரம். லக்னாதிபதி லாப ஸ்தானத்தில் அமர்ந்து பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் தொழில் ஸ்தானாதிபதியால் பார்க்கப்படுகிறார். சுக, பூர்வபுண்ணியாதிபதியான சனிபகவான் களத்திர நட்பு ஸ்தானத்தில் நீச்சபங்க ராஜயோகம் பெற்று குருபகவானுடன் இணைந்து லக்னத்தையும் அங்கு அமர்ந்திருக்கும் வாக்கு ஸ்தானாதிபதியையும் பார்வை செய்கிறார்கள். குருபகவானின் பார்வை லக்னாதிபதியின் மீதும் படிகிறது. தற்சமயம் குருமகா தசையும் நடப்பதால் 2021 -ஆம் ஆண்டு வெளிநாடு சென்று மேற்படிப்பு படிக்க வாய்ப்புள்ளது. பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com