எனக்கு சுக்கிர தசை நடக்கிறது. இதுவரை வாடகை வீட்டில்தான் குடியிருக்கிறேன். சொந்த வீடு அமையுமா? 3 மனைகள் வாங்கியும் இதுவரை பலனில்லை. மனை தொடர்பாக உள்ள பிரச்னை எப்போது முடியும்? - வாசகர், திருவல்லிக்கேணி

உங்களுக்கு கும்ப லக்னம், கும்ப ராசி, பூரட்டாதி நட்சத்திரம். லக்னாதிபதி சனிபகவான் அஷ்டம ஸ்தானத்தில் அமர்ந்திருப்பது சிறப்பு.

உங்களுக்கு கும்ப லக்னம், கும்ப ராசி, பூரட்டாதி நட்சத்திரம். லக்னாதிபதி சனிபகவான் அஷ்டம ஸ்தானத்தில் அமர்ந்திருப்பது சிறப்பு. தன, லாபாதிபதி குருபகவான் தைரிய ஸ்தானத்தில் அமர்ந்து நட்பு, பாக்கியம், அங்கு அமர்ந்திருக்கும் செவ்வாய்பகவான், லாப ஸ்தானங்களைப் பார்வை செய்கிறார். பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் பூர்வபுண்ணியாதிபதி ஆட்சி பெற்று சூரியபகவானுடன் இணைந்து புதஆதித்ய யோகத்தைப் பெறுகிறார். குருமங்கள யோகமும் சிறப்பாக உண்டாகிறது. தற்சமயம் சுக ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கும் சுக பாக்கியாதிபதியான சுக்கிரபகவானின் தசை நடக்கிறது. அதனால் உங்கள் ஜாதகம் சராசரிக்கும் சற்று கூடுதலாக பலம் பெற்றிருக்கிறது என்றுகூற வேண்டும். அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குப்பிறகு உங்கள் அசையாச் சொத்துகளில் இருந்த பிரச்னைகள் தீர்ந்து விடும். அவைகளால் வீடு கட்டும் யோகம் உண்டாகும். குடும்பத்திலும் வெளியிலும் உங்கள் மதிப்பு, கவுரவம், அந்தஸ்து உயரும். எதிர்காலம் வளமாக அமையும். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com