என் நண்பருக்கு 52 வயதாகிறது. இதுவரை திருமணம் நடைபெறவில்லை. இவர் குடும்பத்தினர் திருமண முயற்சிகள் ஏதும் எடுக்காமலேயே இருந்துவிட்டனர். இனி முயற்சி செய்தால் திருமணம் நடக்க வாய்ப்புள்ளதா? - வாசகர், நீடாமங்கலம்

உங்கள் நண்பருக்கு தனுசு லக்னம், ரிஷப ராசி, ரோகிணி நட்சத்திரம். லக்னம் மற்றும் சுக ஸ்தானாதிபதியான குருபகவான் ஆறாம் வீட்டில் சந்திர, ராகுபகவான்களுடன் இணைந்திருக்கிறார்.

உங்கள் நண்பருக்கு தனுசு லக்னம், ரிஷப ராசி, ரோகிணி நட்சத்திரம். லக்னம் மற்றும் சுக ஸ்தானாதிபதியான குருபகவான் ஆறாம் வீட்டில் சந்திர, ராகுபகவான்களுடன் இணைந்திருக்கிறார். களத்திர, நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான புதபகவான் பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரபகவானுடன் இணைந்திருப்பது சிறப்பு. தற்சமயம், சனிமகா தசையில் புதன் புக்தி நடப்பதால் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் தகுதியான பெண் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரச் சொல்லவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com