என் மகளுக்கு கண்ணில் தூரப்பார்வை குறைபாடு உள்ளது? மாப்பிள்ளை வீட்டிற்கு இதை தெரியப்படுத்தியே மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்விக்கப்பட்டது. இப்போது நாங்கள் அவர்களை ஏமாற்றி விட்டதாகச் சொல்லி, தீவிரமாக மருத்துவம் பார்த்து நல்லநிலையில் கொண்டு வந்து விடும்படியாகச் சொல்லி என் மகளை அனுப்பி வைத்து விட்டனர். பார்வை குறைபாட்டிற்கு கண்ணாடி அணிந்திருக்கிறார். இருப்பினும் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர். கணவருடன் இணைந்து வாழ்வாரா? - வாசகர், தஞ்சாவூர்

உங்கள் மகளுக்கு தனுசு லக்னம், மீன ராசி, ரேவதி நட்சத்திரம். களத்திர, நட்பு ஸ்தானாதிபதியான புதபகவான் பாக்கிய ஸ்தானத்தில் பூர்வபுண்ணியாதிபதியான செவ்வாய்பகவானுடனும்

உங்கள் மகளுக்கு தனுசு லக்னம், மீன ராசி, ரேவதி நட்சத்திரம். களத்திர, நட்பு ஸ்தானாதிபதியான புதபகவான் பாக்கிய ஸ்தானத்தில் பூர்வபுண்ணியாதிபதியான செவ்வாய்பகவானுடனும் லாபாதிபதியான சுக்கிரபகவானுடனும் இணைந்திருக்கிறார். தற்சமயம் சுக்கிரபகவானின் தசையில் ராகுபகவானின் புக்தி நடப்பதால் இந்த ஆண்டே கணவருடன் இணைவார். எதிர்காலம், புத்திரபாக்கியம் சிறப்பாக உள்ளது. பிரதி வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com