நான் தற்போது குளிர்பானம் தொழில் செய்கிறேன். வேறு என்ன தொழில் செய்தால் முன்னேறலாம்? சொந்த வீடு எப்போது அமையும்? தற்போது கார் ஓட்டி வரும் என் மகன் என்ன தொழில் செய்தால் முன்னேற்றம் பெறுவார்? திருமணம் எப்போது நடைபெறும்? என் மகளுக்கு வங்கியில் வேலை கிடைக்குமா? திருமணம் எப்போது கைகூடும்? - வாசகர், கள்ளக்குறிச்சி

உங்களுக்கு கும்ப லக்னம், ரிஷப ராசி, ரோகிணி நட்சத்திரம். களத்திர ஸ்தானாதிபதி, பூர்வபுண்ணியாதிபதி மற்றும் பாக்கியாதிபதிகள் பாக்கிய ஸ்தானத்தில் இணைந்து

உங்களுக்கு கும்ப லக்னம், ரிஷப ராசி, ரோகிணி நட்சத்திரம். களத்திர ஸ்தானாதிபதி, பூர்வபுண்ணியாதிபதி மற்றும் பாக்கியாதிபதிகள் பாக்கிய ஸ்தானத்தில் இணைந்து லக்னத்திலுள்ள குருபகவானால் பார்க்கப்படுகிறார்கள். தற்சமயம் அயன ஸ்தானத்தில்ஆட்சி பெற்றுள்ள லக்னாதிபதியான சனிபகவானின் தசை நடப்பதால் நீங்கள் செய்துவரும் தொழிலிலேயே சிறப்பான வளர்ச்சியை அடைவீர்கள். இன்னும் இரண்டாண்டுகளுக்குள் சொந்த வீடு அமையும். உங்கள் மகனுக்கு ரிஷப லக்னம், கன்னி ராசி, உத்திரம் நட்சத்திரம். தர்மகர்மாதிபதியான சனிபகவான் கர்ம ஸ்தானமான பத்தாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்து சச மகா யோகத்தைக் கொடுக்கிறார். அவர் செய்துவரும் தொழிலும் அவருக்கு ஏற்றதாகவே அமைகிறது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் அந்நியத்தில் பெண் அமைந்து திருமணம் கைகூடும். உங்கள் மகளுக்கு ரிஷப லக்னம், விருச்சிக ராசி, கேட்டை நட்சத்திரம். அரசு கிரகங்கள் வலுவாக உள்ளதால் வங்கி காப்பீடு போன்ற துறைகளில் வேலை கிடைக்கும். 2021 -ஆம் ஆண்டுக்குள் அந்நியத்தில் திருமணம் கைகூடும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com