என் மகளுக்கு எப்போது திருமணம் கைகூடும்? நல்ல வேலையில் உள்ளார். பரிகாரம் என்ன செய்ய வேண்டும்? - வாசகி, கோயம்புத்தூர்
By DIN | Published On : 06th December 2019 04:13 PM | Last Updated : 06th December 2019 04:13 PM | அ+அ அ- |

உங்கள் மகளுக்கு மிதுன லக்னம், கடக ராசி, ஆயில்ய நட்சத்திரம். லக்னம் மற்றும் சுக ஸ்தானத்திற்கு அதிபதியான புதபகவான் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் மூலதிரிகோணம் பெற்றுள்ள பூர்வபுண்ணியாதிபதியுடனும் களத்திர நட்பு தொழில் ஸ்தானாதிபதியுடனும் ராகுபகவானுடனும் இணைந்திருக்கிறார். தைரிய ஸ்தானாதிபதியான சூரியபகவான் சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும், பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான சனிபகவான் பாக்கிய ஸ்தானத்தில் மூலதிரிகோணம் பெற்றமர்ந்து குருபகவானின் ஐந்தாம் பார்வையை பெறுகிறார். குருபகவானின் ஏழாம் பார்வை லாப ஸ்தானத்தின் மீதும் அங்கு அமர்ந்திருக்கும் கேதுபகவானின் மீதும் படிகிறது. ஆறு மற்றும் பதினொன்றாமதிபதியான செவ்வாய்பகவான் தனம் வாக்கு குடும் ஸ்தானத்தில் நீச்சம் பெற்று அமர்ந்து, அங்கு ஆட்சி பெற்றமர்ந்திருக்கும் சந்திரபகவானுடன் இணைந்திருப்பதால் நீச்சபங்க ராஜயோகத்தைப் பெறுகிறார். இவரின் ஜாதகம் சராசரிக்கும் சற்று கூடுதலான பலத்தைப் பெற்றிருக்கிறது என்று கூற வேண்டும். தற்சமயம் சுக்கிரமகா தசையில் புதபகவானின் புக்தி நடப்பதால் இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் பூர்வபுண்ணிய ஸ்தானத்திற்கு ஏற்ற சமதோஷமுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.