Enable Javscript for better performance
எனது மகனுக்கு பெண் பார்த்து வருகிறேன்.  செவ்வாய்தோஷம் இருக்கிறது என்கிறார்கள்.  உத்தியோகத்தில் மதுரை- Dinamani

சுடச்சுட

    

    எனது மகனுக்கு பெண் பார்த்து வருகிறேன்.  செவ்வாய்தோஷம் இருக்கிறது என்கிறார்கள்.  உத்தியோகத்தில் மதுரைக்கு மாற்றம் கிடைக்குமா? அல்லது பதவி உயர்வு வருமா? உத்தியோகம் பார்க்கும் பெண் அமையுமா? வீடு கட்டும் வாய்ப்பு எப்போது கிடைக்கும்? - வாசகர், மதுரை

    By DIN  |   Published on : 11th January 2019 10:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உங்கள் மகனுக்கு ரிஷப லக்னம், துலாம் ராசி, லக்னாதிபதி தனாதிபதி, களத்திர ஸ்தானாதிபதி, பாக்கியாதிபதிகள் சுக ஸ்தானத்தில் இணைந்திருக்கிறார்கள். செவ்வாய்பகவான் சுக ஸ்தானத்தில் சூரியபகவானின் வீடான சிம்ம ராசியில் அமர்ந்திருப்பதால் செவ்வாய்தோஷம் இல்லை என்று கூறவேண்டும். அதோடு செவ்வாய்பகவான், குருபகவானுடன் இணைந்திருப்பதும் சிறப்பாகும். இதனாலும் செவ்வாய்தோஷம் அடிபட்டுப்போகிறது. அவருக்கு படித்த நல்ல வேலையிலுள்ள பெண் இந்த ஆண்டு இறுதிக்குள் அமைந்து திருமணம் கைகூடும். வெளியூரில் பதவி உயர்வு கிடைக்கும். இன்னும் 3 ஆண்டுகளுக்குப்பிறகு சொந்த வீடுகட்டும் யோகங்கள் உண்டாகும். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai