சுடச்சுட

    

    என் மகனுக்கு கடந்த 3 வருடங்களாக பெண் பார்த்து வருகிறோம். நிறைய பரிகார பூஜைகளும் செய்துள்ளோம். படித்த பெண் அமைவாரா? திருமணம் எப்போது நடைபெறும்? நிலையான வருமானம் கிடைக்கும் வேலை அமையுமா?  - வாசகர், விழுப்பும்

    By DIN  |   Published on : 11th January 2019 10:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உங்கள் மகனுக்கு மீன லக்னம், தனுசு ராசி. உத்திரட்டாதி நட்சத்திரம். பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி தொழில் ஸ்தானத்தில் வர்கோத்தமத்தில் இருப்பது சிறப்பு. சுக, பாக்கியாதிபதியான செவ்வாய்பகவான் உச்சம் பெற்றிருப்பதும் சிறப்பு. தற்சமயம் தொழில் ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் ராகுபகவானின் தசையில் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் தொழில் ஸ்தானாதிபதியின் புக்தி நடப்பதால் இந்த ஆண்டே படிப்புக் கேற்ற வேலையும் திருமணமும் கைகூடும். சொந்தத் தொழில் வேண்டாம்.  மற்றபடி எதிர்காலம் சிறப்பாக அமையும்.  பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai