சுடச்சுட

    

    என் மகன் எந்த வேலையிலும் நிரந்தரமாக இல்லை. மேலும் அவருக்கு திருமணமாகி 2 குழந்தைகளும் இருக்கிறார்கள். பல வருடங்களாக இப்படியே பார்த்துப் பார்த்து  என் மகன் மீது வெறுப்பு ஏற்பட்டு விட்டது. நான் இறப்பதற்குள்ளாவது நல்ல மகனாக அவரைப் பார்ப்பேனா?  - வாசகர், பெங்களூரு

    By DIN  |   Published on : 11th January 2019 10:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உங்கள் மகனுக்கு மகர லக்னம், தனுசு ராசி. லக்னாதிபதியும் குருபகவானும் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார்கள். பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானாதிபதியான சுக்கிரபகவான் லாப ஸ்தானத்தில் அமர்ந்து நவாம்சத்தில் உச்சம் பெறுகிறார். லக்னத்தையும் அங்கு அமர்ந்திருக்கும் கேது, செவ்வாய் பகவான்களையும் குருபகவான் பார்வை செய்கிறார். இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குப்பிறகு அவரின் மனநிலையில் அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும் முருகப் பெருமானையும் வழிபட்டு வரவும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai