Enable Javscript for better performance
என் மகளுக்கு எப்போது திருமணம் நடைபெறும்?எத்திசையில் வரன் அமையும்? லக்னத்திற்கு 7- இல் சனி உள்ளத்தால்- Dinamani

சுடச்சுட

    

    என் மகளுக்கு எப்போது திருமணம் நடைபெறும்?எத்திசையில் வரன் அமையும்? லக்னத்திற்கு 7- இல் சனி உள்ளத்தால் திருமணம் தள்ளிக்கொண்டே போவதாகச் சொல்கிறார்கள். இது உண்மையா? அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்படுகிறது. இது சரியாகுமா? - வாசகர், ஆரணி

    By DIN  |   Published on : 11th January 2019 10:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உங்கள் மகளுக்கு கடக லக்னம், சிம்ம ராசி. லக்னாதிபதி குடும்ப ஸ்தானத்தில் பாக்கியாதிபதியான குருபகவானுடன் இணைந்து குருசந்திரயோகத்தைப் பெறுகிறார். களத்திர ஸ்தானாதிபதி களத்திர ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமர்ந்து பஞ்சமஹா புருஷ யோகங்களில் ஒன்றான சசமஹா யோகத்தைக் கொடுக்கிறார். பூர்வபுண்ணிய  புத்திர ஸ்தானாதிபதியும் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். குடும்பாதிபதி தொழில் ஸ்தானத்தில்  உச்சம் பெற்றிருக்கிறார். இந்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் படித்த நல்ல வேலையிலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். மற்றபடி அரசு அல்லது அரசு சம்பந்தமான வேலை கிடைக்கும். உடல்நலமும் சீராவே தொடரும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai