Enable Javscript for better performance
நான் செய்துவரும் தொழிலை விட்டுவிட்டு டெம்போ ஒன்றை வாங்கி ஓட்டலாம் என்று இருக்கிறேன். இதைச் செய்யலாமா- Dinamani

சுடச்சுட

    

    நான் செய்துவரும் தொழிலை விட்டுவிட்டு டெம்போ ஒன்றை வாங்கி ஓட்டலாம் என்று இருக்கிறேன். இதைச் செய்யலாமா? நான் கட்டிய வீட்டின் கடன் எப்போது அடையும்? பூர்வீகச் சொத்தில் வரவேண்டிய பணம் எப்போது கிடைக்கும்? என் மகளுக்கு திருமணம் எப்போது அமையும்? - வாசகர், உடுமலை

    By DIN  |   Published on : 11th January 2019 10:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உங்களுக்கு தனுசு லக்னம், கும்பராசி. லக்னாதிபதி, பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்து பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் பூர்வபுண்ணியாதிபதியையும் லாப ஸ்தானத்தையும் அங்கு ஆட்சி பெற்று அமர்ந்துள்ள லாபாதிபதியையும் லக்னத்தையும் அங்கு அமர்ந்திருக்கும் நட்பு மற்றும் தொழில் ஸ்தானாதிபதியையும் பார்வை செய்கிறார். ஆறாம் வீட்டில் ராகுபகவான் இருப்பதும் சிறப்பாகும். தற்சமயம் புத மகா தசையில் ராகுபகவானின் புக்தி நடக்கத் தொடங்கி உள்ளது. அதனால் இன்னும் மூன்றாண்டுகள் சிறப்பாக அமையும். கடன்கள் அடைந்துவிடும். பூர்வீகச் சொத்தில் இருக்கும் தடையும் நீங்கிவிடும். நீங்கள் செய்துவரும் ஏஜென்ஸி, ஆயில் தொழில்களைத் தொடர்ந்து செய்யலாம். வண்டியையும் ஓட்டி கூடுதல் வருமானம் பெற முடியும். பிரதி புதன்கிழமைகளில் ஸ்ரீ ராமரை வழிபட்டு வரவும். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai