உங்களுக்கு கன்னி லக்னம், துலாம் ராசி. களத்திர ஸ்தானாதிபதியும் லக்னாதிபதியும் ஒருவருக்கொருவர் கேந்திரம் பெற்றிருக்கிறார்கள். தற்சமயம் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் பூர்வபுண்ணியாதிபதியின் தசை நடக்கிறது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குப்பிறகு உங்களுக்கு சேர வேண்டிய பொருள்கள் கணவரிடமிருந்து கிடைத்து விடும். இந்த ஆண்டு உங்கள் தகுதிக்கேற்ற ஆசிரியர் பணி கிடைத்துவிடும். எதிர்காலம் பிரகாசமாக அமையும். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும்.