என் மகனுக்கு கடந்த 3 வருடங்களாக பெண் பார்த்து வருகிறோம். நிறைய பரிகார பூஜைகளும் செய்துள்ளோம். படித்த பெண் அமைவாரா? திருமணம் எப்போது நடைபெறும்? நிலையான வருமானம் கிடைக்கும் வேலை அமையுமா? - வாசகர், விழுப்பும்

உங்கள் மகனுக்கு மீன லக்னம், தனுசு ராசி. உத்திரட்டாதி நட்சத்திரம். பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி தொழில் ஸ்தானத்தில் வர்கோத்தமத்தில் இருப்பது

உங்கள் மகனுக்கு மீன லக்னம், தனுசு ராசி. உத்திரட்டாதி நட்சத்திரம். பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி தொழில் ஸ்தானத்தில் வர்கோத்தமத்தில் இருப்பது சிறப்பு. சுக, பாக்கியாதிபதியான செவ்வாய்பகவான் உச்சம் பெற்றிருப்பதும் சிறப்பு. தற்சமயம் தொழில் ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் ராகுபகவானின் தசையில் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் தொழில் ஸ்தானாதிபதியின் புக்தி நடப்பதால் இந்த ஆண்டே படிப்புக் கேற்ற வேலையும் திருமணமும் கைகூடும். சொந்தத் தொழில் வேண்டாம்.  மற்றபடி எதிர்காலம் சிறப்பாக அமையும்.  பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com