என் மகளுக்கு எப்போது திருமணம் நடைபெறும்?எத்திசையில் வரன் அமையும்? லக்னத்திற்கு 7- இல் சனி உள்ளத்தால் திருமணம் தள்ளிக்கொண்டே போவதாகச் சொல்கிறார்கள். இது உண்மையா? அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்படுகிறது. இது சரியாகுமா?- வாசகர், ஆரணி

உங்கள் மகளுக்கு கடக லக்னம், சிம்ம ராசி. லக்னாதிபதி குடும்ப ஸ்தானத்தில் பாக்கியாதிபதியான குருபகவானுடன் இணைந்து குருசந்திரயோகத்தைப் பெறுகிறார்

உங்கள் மகளுக்கு கடக லக்னம், சிம்ம ராசி. லக்னாதிபதி குடும்ப ஸ்தானத்தில் பாக்கியாதிபதியான குருபகவானுடன் இணைந்து குருசந்திரயோகத்தைப் பெறுகிறார். களத்திர ஸ்தானாதிபதி களத்திர ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமர்ந்து பஞ்சமஹா புருஷ யோகங்களில் ஒன்றான சசமஹா யோகத்தைக் கொடுக்கிறார். பூர்வபுண்ணிய  புத்திர ஸ்தானாதிபதியும் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். குடும்பாதிபதி தொழில் ஸ்தானத்தில்  உச்சம் பெற்றிருக்கிறார். இந்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் படித்த நல்ல வேலையிலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். மற்றபடி அரசு அல்லது அரசு சம்பந்தமான வேலை கிடைக்கும். உடல்நலமும் சீராவே தொடரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com