சுடச்சுட

  

  எங்களுக்கு திருமணமாகி 5 வருடங்கள் ஆகின்றன.  இன்னும் புத்திர பாக்கியம் கிட்டவில்லை. பரிகாரங்களும் செய்துள்ளோம். புத்திரபாக்கியம் எப்போது கிடைக்கும்? - வாசகர், திருப்பூர்

  By DIN  |   Published on : 25th January 2019 10:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  உங்களுக்கு கடக லக்னம், விருச்சிக ராசி. லக்னாதிபதியும் பாக்கியாதிபதியும் இணைந்து, லாப ஸ்தானத்திலுள்ள குடும்பாதிபதி மற்றும் பூர்வபுண்ணியாதிபதிகள் பார்வை செய்கிறார்கள். அதோடு தற்சமயம் லக்னாதி பதியான சந்திரபகவானின் தசையும்  நடக்கத் துவங்கியுள்ளது. குருசந்திர யோகம், சந்திரமங்கள யோகம், குருமங்கள யோகம் மற்றும் சிவராஜ யோகம், சச மகா யோகம் போன்ற சிறப்பான யோகங்கள் உள்ளன. உங்கள் மனைவிக்கு மேஷ லக்னம், ரிஷப ராசி. பாக்கியாதிபதி லக்னத்தில் அமர்ந்து பூர்வபுண்ணிய ஸ்தானம், களத்திர ஸ்தானம் மற்றும் பாக்கிய ஸ்தானங்களைப் பார்வை செய்கிறார். அவருக்கு தற்சமயம் ராகுபகவானின் தசையில் சுக்கிரபகவானின் புக்தி நடக்கிறது. பூர்வபுண்ணியாதிபதியும் லக்னாதிபதியுடன் இணைந்திருக்கிறார்கள். உங்கள் இருவரின்  ஜாதகங்களின்படி இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் மழலை பாக்கியம் உண்டாகும். ஓர் ஆண், ஒரு பெண் ஆகிய இரண்டு குழந்தைகள் உண்டு. மற்றபடி நீங்கள் செய்துவரும் வழிபாடுகளைத் தொடர்ந்து செய்து வந்தாலே போதுமானது. உங்கள் குடும்பத்திற்கு வளமான எதிர்காலம் உள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai