எனக்கு 61 வயதாகிறது. ஆரம்பம் முதலே உத்தியோகம் ஸ்திரமாக அமையவில்லை. பல கம்பெனிகள் மாறி, நடுவில் தடை ஏற்பட்டு என மிகுந்த மன உளைச்சலாக உள்ளது. தற்போது வேலை எதுவும் இல்லாமல் இருக்கிறேன். வேலை அமையுமா? சுயதொழில் செய்யலாமா? - வாசகர், மதுரை
By DIN | Published on : 25th January 2019 10:07 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
உங்களுக்கு சிம்ம லக்னம், கன்னி ராசி. லக்னாதிபதி லக்னத்திலேயே ஆட்சி பெற்று பாக்கியாதிபதியுடன் இணைந்து இருக்கிறார். தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் வலுவான கிரகங்கள் இணைந்து இருப்பதால் தற்சமயம் நடக்கும் சனிமகா தசையிலேயே ஓரளவு நல்ல வருமானம் வரும் வேலை இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குப்பிறகு கிடைக்கும். தொடர்வது உச்சம் பெற்றுள்ள தனாதிபதியான புதபகவானின் தசையாக உள்ளதால் எதிர்காலம் சிறப்பாக அமையும். சுயதொழில் வேண்டாம். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும்.