சுடச்சுட

    

    எனது சகோதரியின் மகனுக்கு வயது 46. திருமணம் இன்னும் கைகூடவில்லை. நிறைய பரிகாரங்கள் செய்துள்ளோம். வேறு ஏதும் பரிகாரங்கள் செய்யவேண்டுமா? எதிர்காலம், தொழில் எவ்வாறு இருக்கும்?  - வாசகர், செங்கம்

    By DIN  |   Published on : 25th January 2019 10:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உங்கள் சகோதரி மகனுக்கு ரிஷப லக்னம், மிதுன ராசி. லக்னாதிபதி நீச்சம் பெற்றிருந்தாலும் நீச்சபங்க ராஜயோகம் அடைகிறார். தனம் மற்றும் பூர்வபுண்ணியாதிபதியான புதபகவான் களத்திர, நட்பு ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். தர்மகர்மாதிபதியான சனி பகவான் லக்னத்தில் அமர்ந்திருக்கிறார். தற்சமயம் சனிபகவானின் தசையில் தைரிய ஸ்தானாதிபதியான சந்திரபகவானின் புக்தி நடக்கிறது. இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குப்பிறகு படித்த பெண் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும் முருகப்பெருமானையும் வழிபட்டு வரவும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai