சுடச்சுட

    

    எனது மகள் பி.சி.ஏ., படிக்கிறார். அவரது ஜாதகம் சுத்தமானதா? மேற்படிப்பு தொடர வாய்ப்பு உண்டா? திருமணம் எப்போது நடைபெறும்? புத்திரபாக்கியம் உண்டா? அரசுப் பணி கிடைக்குமா? - வாசகி, திருப்பத்தூர்

    By DIN  |   Published on : 25th January 2019 10:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உங்கள் மகளுக்கு கடக லக்னம் என்று வருகிறது. மிதுன லக்னம் அல்ல. மற்றபடி சதய நட்சத்திரம் நான்காம் பாதம் என்பது சரியானது. லக்னாதிபதி அஷ்டம ஸ்தானத்தில் பாக்கியாதிபதியுடன் இணைந்திருக்கிறார். அவர்களுடன் கேதுபகவான் இணைந்திருக்கிறார். குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய்பகவான் ராகுபகவானுடன் இணைந்திருக்கிறார். லக்னாதிபதி பூர்வபுண்ணியாதிபதி மற்றும் பாக்கியாதிபதி ஆகிய மூன்று திரிகோணாதிபதிகள் இணைந்திருக்கிறார்கள் என்று கூறவேண்டும். சர்ப்ப தோஷம் இருந்தாலும் குருபகவானின் சஞ்சாரத்தால் தோஷம் குறைகிறது. மேலாண்மைத் துறையில் மேற்படிப்பு படிக்கலாம். அரசு அல்லது அரசு சார்ந்த துறைகளிலும் வேலை கிடைக்கும். இன்னும் இரண்டாண்டுகளுக்குப்பிறகு திருமணம் கைகூடும். புத்திரபாக்கியத்திற்குக் குறை இல்லை. பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai