சுடச்சுட

    

    என் மகனுக்கு எப்போது நல்ல வேலை கிடைக்கும்? திருமணம் எப்போது நடைபெறும்? ஆயுள் எவ்வாறு உள்ளது? - வாசகர், வேலூர்

    By DIN  |   Published on : 25th January 2019 10:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உங்கள் மகனுக்கு தனுசு லக்னம், துலாம் ராசி. லக்னம் மற்றும் சுக ஸ்தானத்திற்கு அதிபதியான குருபகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் நட்பு ஸ்தானாதிபதியின் சாரத்தில்  உச்சம் பெற்று அமர்ந்து தர்மகர்மாதிபதிகளான புதஆதித்யர்களுடன் கூடி இருக்கிறார். தர்மகர்மாதிபதிகள் மறைவு பெற்றிருந்தாலும் தர்மாதிபதி யோகம் பெருமளவுக்கு வேலை செய்யும் என்று கூறவேண்டும். அவருக்கு தற்சமயம் குருபகவானின் தசையில் புதபகவானின் புக்தி இந்த ஆண்டு இறுதிவரை நடக்கும். அதனால் உடனடியாகவே அவருக்கு தகுந்த வேலை கிடைத்துவிடும். அடுத்த ஆண்டு இறுதிக்குள் திருமணமும் கைகூடும்.  பித்ருகாரகரான சூரியபகவான் சுபபலத்துடன் இருப்பதால் தீர்க்காயுள் உண்டு. பிரதி வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தியையும் குருபகவானையும் வழிபட்டு வரவும். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai