எனது சகோதரியின் மகனுக்கு வயது 46. திருமணம் இன்னும் கைகூடவில்லை. நிறைய பரிகாரங்கள் செய்துள்ளோம். வேறு ஏதும் பரிகாரங்கள் செய்யவேண்டுமா? எதிர்காலம், தொழில் எவ்வாறு இருக்கும்? - வாசகர், செங்கம்

உங்கள் சகோதரி மகனுக்கு ரிஷப லக்னம், மிதுன ராசி. லக்னாதிபதி நீச்சம் பெற்றிருந்தாலும் நீச்சபங்க ராஜயோகம் அடைகிறார்.

உங்கள் சகோதரி மகனுக்கு ரிஷப லக்னம், மிதுன ராசி. லக்னாதிபதி நீச்சம் பெற்றிருந்தாலும் நீச்சபங்க ராஜயோகம் அடைகிறார். தனம் மற்றும் பூர்வபுண்ணியாதிபதியான புதபகவான் களத்திர, நட்பு ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். தர்மகர்மாதிபதியான சனி பகவான் லக்னத்தில் அமர்ந்திருக்கிறார். தற்சமயம் சனிபகவானின் தசையில் தைரிய ஸ்தானாதிபதியான சந்திரபகவானின் புக்தி நடக்கிறது. இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குப்பிறகு படித்த பெண் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும் முருகப்பெருமானையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com