Enable Javscript for better performance
என் மகன் வெளிநாட்டில் வேலை செய்த போது எங்களை நன்றாக கவனித்துக்கொண்டார். ஆனால் தற்போது செய்து வந்த வே- Dinamani

சுடச்சுட

    

    என் மகன் வெளிநாட்டில் வேலை செய்த போது எங்களை நன்றாக கவனித்துக்கொண்டார். ஆனால் தற்போது செய்து வந்த வேலை விட்டுவிட்டு, இங்குவந்து வேலை செய்கிறார். என் மகனது இந்த மாற்றம் எப்போது சீராகும்? எங்கள் விருப்பப்படி நாங்கள் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்வாரா?  - வாசகர், திருப்பூர்

    By DIN  |   Published on : 05th July 2019 09:54 AM  |   அ+அ அ-   |    |  

    உங்கள் மகனுக்கு மகர லக்னம், துலாம் ராசி, சுவாதி நட்சத்திரம். லக்னாதிபதி லக்னத்திலேயே ஆட்சி பெற்று அமர்ந்து சச மகா யோகத்தைக் கொடுக்கிறார். குருபகவானும் களத்திர ஸ்தானத்தில் உச்சம் பெற்று ஹம்ஸ யோகத்தைக் கொடுக்கிறார். களத்திர, நட்பு ஸ்தானத்தில் புதஆதித்ய யோகமும் உண்டாகிறது. சந்திரபகவானும் குருபகவானின் கேந்திரத்தில் இருப்பதால் கஜகேசரி யோகமும் உண்டாகிறது. தற்சமயம் லக்னாதிபதியான சனிபகவானின் தசையில் சுயபுக்தி முடிந்து பாக்கியாதிபதியான புதபகவானின் புக்தி நடக்கத் தொடங்கியுள்ளது சிறப்பாகும். அடுத்த ஆண்டு இறுதிக்குள் பெற்றோர் நிச்சயித்த திருமணம் கைகூடும். மறுபடியும் பெற்றோருடன் இணக்கமாக வாழ்வார். மீண்டும் வெளிநாடு செல்லும் யோகமும் உண்டாகும். எதிர்காலம் வளமாக அமையும். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும்.
     

    kattana sevai