சுடச்சுட

    

    சித்த மருத்துவம் படித்துள்ள என் மகளுக்கு அரசு வேலை கிடைக்குமா? எப்போது கிடைக்கும்?  - வாசகி, காஞ்சிபுரம்

    By DIN  |   Published on : 05th July 2019 09:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உங்கள் மகளுக்கு மேஷ லக்னம், விருச்சிக ராசி. லக்னாதிபதி குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்து சுகாதிபதியைப் பார்வை செய்கிறார். இதனால் சந்திரமங்கள யோகம் உண்டாகிறது. பாக்கியாதிபதி உச்சம் பெற்று சந்திரபகவானைப் பார்வை செய்வதால் குருசந்திர யோகம் உண்டாகிறது. மேலும் குருபகவானின் பார்வை தொழில் ஸ்தானத்தின் மீதும் படிகிறது. அரசு கிரகங்கள் வலுவாக உள்ளதாலும் தற்சமயம் பாக்கியாதிபதியின் புக்தி நடப்பதாலும் அடுத்த ஆண்டு இறுதிக்குள் அரசு அல்லது அரசு சார்ந்த வேலை கிடைக்கும். பிரதி புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும். எதிர்காலம் சிறப்பாக அமையும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai