எனக்கு இதுவரை நிரந்தர உத்தியோகம் இல்லை. நிறைய கம்பெனிகள் மாறிவிட்டேன். திருமண தோஷம் உள்ளதாக கூறுகிறார்கள். நிறைய பரிகாரங்களும் செய்துள்ளோம். திருமணம் நடைபெறுமா? நிரந்தர உத்தியோகம் கிடைக்குமா? வெளிநாடு சென்று வேலை பார்க்கும் வாய்ப்பு உண்டா? புத்திர தோஷம் உள்ளதா? - வாசகர், பேராவூரணி

உங்களுக்கு விருச்சிக லக்னம், தனுசு ராசி. தொழில் ஸ்தானத்தில் சனி, ராகுபகவான்கள் இருப்பது சிறப்பு.

உங்களுக்கு விருச்சிக லக்னம், தனுசு ராசி. தொழில் ஸ்தானத்தில் சனி, ராகுபகவான்கள் இருப்பது சிறப்பு. இதனால் உத்தியோகத்தில் படிப்படியான வளர்ச்சி ஏற்பட்டு இன்னும் இரண்டாண்டுகளுக்குள் நல்ல நிலையை எட்டி விடுவீர்கள். இந்த காலகட்டத்திற்குள் திருமணமும் கைகூடும். பாக்கிய ஸ்தானம் வலுவாக இருப்பதால் வெளிநாடு சென்று வசிக்கும் வாய்ப்பு உண்டாகும். புத்திரகாரகர் தன் ஆட்சி வீடான புத்திர ஸ்தானத்தைப் பார்வை செய்வதால் புத்திர பாக்கியம் நல்ல படியாக அமையும். பிரதி வெள்ளிக்கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com