என் மகளுக்கு எப்போது திருமணம் நடைபெறும்? பெற்றோர் செய்யும் திருமணமாக அமையுமா? ஏதும் பரிகாரம் செய்ய வேண்டுமா? - வாசகர், தில்லி

உங்கள் மகளுக்கு விருச்சிக லக்னம், மேஷ ராசி, அஸ்வினி நட்சத்திரம். லக்னம் மற்றும் ஆறாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய்பகவான் பன்னிரண்டாம் வீட்டில் விபரீத ராஜயோகம் பெற்று அமர்ந்திருக்கிறார்.

உங்கள் மகளுக்கு விருச்சிக லக்னம், மேஷ ராசி, அஸ்வினி நட்சத்திரம். லக்னம் மற்றும் ஆறாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய்பகவான் பன்னிரண்டாம் வீட்டில் விபரீத ராஜயோகம் பெற்று அமர்ந்திருக்கிறார். தனம் மற்றும் பூர்வபுண்ணியாதிபதியான குருபகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் அமர்ந்து சுக ஸ்தானத்தையும் அங்கு அமர்ந்திருக்கும் ராகுபகவானையும் ஆறாம் வீட்டையும் அங்கு அமர்ந்திருக்கும் சந்திரபகவானûயும் பார்வை செய்கிறார்.இதனால் குருசந்திர யோகம் உண்டாகிறது. லக்னத்தில் புதஆதித்யர்கள் அமர்ந்து இருப்பதால் புதஆதித்ய யோகம் உண்டாகிறது. தற்சமயம் சூரிய பகவானின் தசை முடியும் தறுவாயில் உள்ளதால் அடுத்த ஆண்டு இறுதிக்குள் பெற்றோர் நிச்சயித்த திருமணம் கைகூடும். பிரதி வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை வழிபட்டு வரவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com