தற்போது செய்து கொண்டிருக்கும் வியாபாரத் தொழிலிலிருந்து ஓய்வு பெறும்பொருட்டு, சொந்தக் கடையை விலைக்கு விற்றுவிட்டு முதுமை காலத்தில் இறைவழிபாட்டில் கழிக்க விரும்புகிறேன். கடை விரைவில் விற்பனை ஆகுமா? - வாசகர், திருச்சி

உங்களுக்கு மேஷ லக்னம், துலாம் ராசி. லக்னாதிபதியும் பூர்வபுண்ணியாதிபதியும் தைரிய ஸ்தானத்தில் இணைந்து பாக்கிய ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார்கள்.

உங்களுக்கு மேஷ லக்னம், துலாம் ராசி. லக்னாதிபதியும் பூர்வபுண்ணியாதிபதியும் தைரிய ஸ்தானத்தில் இணைந்து பாக்கிய ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார்கள். பாக்கியாதிபதியான குருபகவான் குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்து ஆறு, எட்டு, பத்தாம் வீடுகளைப் பார்வை செய்கிறார். மேலும் ஆயுள்காரகரும் ஆறாம் வீட்டில் அமர்ந்து குருபகவானின் பார்வையை பெறுகிறார். தற்சமயம் ஆறாமதிபதியின் தசையில் பிற்பகுதி நடக்கிறது. அதனால் உடனடியாக கடையை விற்க வேண்டாம். இன்னும் நான்காண்டுகளுக்குப்பிறகு விற்கலாம். தீர்க்காயுள் உண்டு. எதிர்காலம் சிறப்பாக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com