எனது மகளுக்கு எப்போது திருமணம் நடைபெறும்? நிறைய பரிகாரங்கள் செய்துள்ளோம். எத்திசையில் வரன் அமையும்? - வாசகர், திருப்பூர்

உங்கள் மகளுக்கு துலாம் லக்னம், கும்ப ராசி. லக்னம் மற்றும் அஷ்டம ஸ்தானத்திற்கு அதிபதியான சுக்கிரபகவான் லாப ஸ்தானத்தில் அமர்ந்து நவாம்சத்தில் ஆட்சி பெறுகிறார்.

உங்கள் மகளுக்கு துலாம் லக்னம், கும்ப ராசி. லக்னம் மற்றும் அஷ்டம ஸ்தானத்திற்கு அதிபதியான சுக்கிரபகவான் லாப ஸ்தானத்தில் அமர்ந்து நவாம்சத்தில் ஆட்சி பெறுகிறார். பூர்வபுண்ணியாதிபதி, பூர்வபுண்ணிய ஸ்தானத்திலும் பாக்கியாதிபதி பாக்கிய ஸ்தானத்திலும் ஆட்சி பெற்றிருக்கிறார்கள். களத்திர ஸ்தானாதிபதி அஷ்டம ஸ்தானத்தில் அமர்ந்து குடும்ப ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். தற்சமயம் பூர்வ புண்ணியாதிபதியான சனிபகவானின் தசையில் பிற்பகுதி நடக்கிறது. இதனால் அவருக்கு அடுத்த ஆண்டு இறுதிக்குள் படித்த நல்ல வேலையிலுள்ள வரன் தெற்கு திசையிலிருந்து அமைந்து திருமணம் கைகூடும். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com