எனது ஆயுள் பாவம் எவ்வாறு உள்ளது? இறுதிக்காலத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தசைகள்? வெளிநாட்டில் வசிக்கும் என் மகனுடன் நான் இருக்க முடியுமா? - வாசகர், வளசரவாக்கம்

உங்களுக்கு மகர லக்னம், கடக ராசி. களத்திர நட்பு ஸ்தானத்தில் லக்ன, குடும்பாதிபதியான சனிபகவான் இணைந்து திக்பலம் பெறுகிறார்.

உங்களுக்கு மகர லக்னம், கடக ராசி. களத்திர நட்பு ஸ்தானத்தில் லக்ன, குடும்பாதிபதியான சனிபகவான் இணைந்து திக்பலம் பெறுகிறார். பூர்வபுண்ணிய புத்திர, தொழில் ஸ்தானாதிபதியான சுக்கிரபகவான் தொழில் ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமர்ந்து பஞ்சமகா புருஷ யோகங்களில் ஒன்றான மாளவிகா யோகத்தைக் கொடுக்கிறார். பாக்கியாதிபதியான புதபகவான் பாக்கிய ஸ்தானத்தில் உச்சம் பெற்று பலம் பெற்ற ஆயுள் ஸ்தானாதிபதியுடன் இணைந்திருக்கிறார். அதனால் உங்களுக்கு தீர்க்காயுள் உண்டு. தற்சமயம் வர்கோத்தமத்தில் உள்ள சந்திரபகவானின் தசை நடக்கத் தொடங்கியுள்ளதால் உங்கள் ஆரோக்கியம் இறுதிவரை சீராகவே இருக்கும். உங்கள் மகனுக்கு தனுசு லக்னம், ரிஷப ராசி. தற்சமயம் ஆட்சி பெற்றுள்ள குருபகவானின் பார்வையை பெற்றுள்ள சனிபகவானின் தசை நடக்கத் தொடங்கியுள்ளதால் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குப்பிறகு நீங்கள் வெளிநாட்டில் வசிக்கும் உங்கள் மகனுடன் இணைந்து வாழ்வீர்கள். மற்றபடி உங்கள் இருவருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com