எனது மனைவி கடந்த 10 ஆண்டுகளாக உடல் நடுக்க நோய் ஏற்பட்டு துன்பப்பட்டு வருகிறார். ஆயுர்வேதம் போன்ற சிகிச்சைகள் கொடுக்கப்படுகிறது. இந்த நோய் எப்போது குணமாகும்? நாங்கள் வெளியில் கடனாக கொடுத்திருந்த பணத்திற்கு சரியாக வட்டியும் வருவதில்லை. என் மனைவியின் உடல்நிலை எப்போது சரியாகும்? எங்கள் பணம் எப்போது கிடைக்கும்? - வாசகர்

உங்கள் மனைவிக்கு விருச்சிக லக்னம், ரிஷப ராசி. ஆரோக்கிய ஸ்தானாதிபதி, களத்திர நட்பு ஸ்தானத்தில் அமர்ந்து நவாம்சத்தில் உச்சம் பெறுகிறார்.

உங்கள் மனைவிக்கு விருச்சிக லக்னம், ரிஷப ராசி. ஆரோக்கிய ஸ்தானாதிபதி, களத்திர நட்பு ஸ்தானத்தில் அமர்ந்து நவாம்சத்தில் உச்சம் பெறுகிறார். தற்சமயம் சுக ஸ்தானாதிபதியான சனிபகவானின் தசையில் இறுதிப்பகுதி நடக்கிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குப்பிறகு உடல் ஆரோக்கியம் சீர்பட்டுவிடும். உங்களுக்கு மீன லக்னம், மீன ராசி. தற்சமயம் சுக, களத்திர ஸ்தானாதிபதியான புதபகவானின் தசையில் இறுதிப்பகுதி நடக்கிறது. இன்னும் இரண்டாண்டுகளுக்குள் வெளியில் கொடுத்திருந்த பணம் கை வந்து சேர்ந்து விடும். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com