Enable Javscript for better performance
என் மகள் வழி பேரனுக்கு ஆட்டிசம் உள்ளது. பெங்களூருவில் தனியார் பள்ளியில் சேர்த்துள்ளோம். இவனின் தாய்- Dinamani

சுடச்சுட

    

    என் மகள் வழி பேரனுக்கு ஆட்டிசம் உள்ளது. பெங்களூருவில் தனியார் பள்ளியில் சேர்த்துள்ளோம். இவனின் தாய் தந்தை இருவரும் தற்கொலை செய்து கொண்டார்கள். இவன் சரியாகி எல்லாரையும் போன்று வாழவேண்டும். எப்போது சரியாவான்? தற்சமயம் நடக்கும் சனி தசையில் திருப்பங்களை எதிர்பார்க்கலாமா? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?  - வாசகி

    Published on : 21st June 2019 02:44 PM  |   அ+அ அ-   |    |  

    உங்கள் பேரனுக்கு துலாம் லக்னம், மிதுன ராசி, புனர்பூசம் நட்சத்திரம். தொழில் ஸ்தானாதிபதியான பத்தாம் வீட்டுக்கதிபதியான சந்திரபகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் குருபகவானின் சாரத்தில் (புனர்பூசம் நட்சத்திரம்) வர்கோத்தமத்தில் (ராசியிலும் நவாம்சத்திலும் ஒரே ராசியில் அமரும் நிலை) அமர்ந்திருக்கிறார். லக்னத்திற்கும் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிரபகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் ராகுபகவானின் சாரத்தில் (திருவாதிரை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மகர ராசியை அடைகிறார். லக்னாதிபதி பாக்கிய ஸ்தானத்தில் தொழில் ஸ்தானாதிபதியுடன் இணைந்திருப்பது சிறப்பு. இதனால் பாக்கிய ஸ்தானம் வலுவடைகிறது என்று கூற வேண்டும்.
     சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும் பூர்வபுண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும் அதிபதியான சனிபகவான் லக்னத்தில் செவ்வாய்பகவானின் சாரத்தில் (சித்திரை நட்சத்திரம்) வர்கோத்தமத்தில் உச்சம் பெற்று அமர்ந்து இருக்கிறார். பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான புதபகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் சனிபகவானின் சாரத்தில் (பூசம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் துலாம் ராசியை அடைகிறார்.
     தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும், களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய்பகவான் லக்னத்தில் சுயசாரத்தில் (சித்திரை நட்சத்திரம்) வர்கோத்தமத்தில் அமர்ந்திருக்கிறார். தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும் ருணம் (கடன்) ரோகம் (வியாதி) சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் சந்திரபகவானின் சாரத்தில் (ரோகிணி நட்சத்திரம்) விபரீத ராஜ யோகம் பெற்று அமர்ந்திருக்கிறார். லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டுக்கதிபதியான சூரியபகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் புதபகவானின் சாரத்தில் (ஆயில்யம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மீன ராசியை அடைகிறார்.
     ராகுபகவான் தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டில் சனிபகவானின் சாரத்தில் (அனுஷ நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கன்னி ராசியை அடைகிறார். கேதுபகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் சூரியபகவானின் சாரத்தில் (கிருத்திகை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மீன ராசியை அடைகிறார். தொழில் ஸ்தானத்தில் புதஆதித்ய யோகம் என்கிற நிபுணத்துவ யோகம் உண்டாகிறது. குருபகவானின் ஐந்தாம் பார்வை அயன மோட்ச ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டையும் ஏழாம் பார்வை தனம்வாக்கு குடும்ப ஸ்தானத்தையும் அங்கு அமர்ந்திருக்கும் ராகுபகவானையும் ஒன்பதாம் பார்வையாக சுக ஸ்தானத்தையும் பார்வை செய்கிறார். சுக ஸ்தானத்தை புத ஆதித்யர்களும் பார்வை செய்கிறார்கள். அதோடு லக்னத்தில் இருக்கும் செவ்வாய்பகவான் நான்காம் பார்வையாக சுக ஸ்தானத்தையும் ஏழாம் பார்வையாக களத்திர நட்பு ஸ்தானத்தையும் எட்டாம் பார்வையாக எட்டாம் வீட்டையும் அங்கு அமர்ந்திருக்கும் குரு, கேது பகவான்களையும் பார்வை செய்கிறார்.
     லக்னம், லக்னாதிபதி, பூர்வபுண்ணிய ஸ்தானம், பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி மற்றும் பாக்கிய ஸ்தானம் பாக்கியாதிபதி ஆகிய மூன்று ஸ்தானங்களின் பலத்தை ஆறாம் வீடு மற்றும் ஆறாம் வீட்டுக்கதிபதியின் பலத்துடன் சீர்தூக்கி பார்த்து நோய்நொடி உபாதைகளின் பாதிப்பு எந்த அளவுக்கு இருக்கும், எக்காலத்தில் குறையத் தொடங்கும், எக்காலத்தில் மறையும் என்பதை முடிவு செய்ய வேண்டும். இதேபோன்று கடன், வழக்கு விவகாரங்களையும் முடிவு செய்ய வேண்டும்.
     அவருக்கு சுக்கிர, சனி, புத பகவான்களும் மூன்று திரிகோண ராசிகளும் சுப பலத்துடன் இருப்பதைக் காணமுடிகிறது. பிறப்பு மூன்று, ஆறாமதிபதியான குருபகவானின் தசையில் நடக்கத் தொடங்கியது. சென்ற ஆண்டு தொடக்கம் வரை ஆறாமதிபதியின் தசை நடந்தது. இக்காலகட்டத்தில் அவருக்கு இத்தகைய உபாதை ஏற்பட்டது. தற்சமயம் அவருக்கு சனிபகவானின் தசையில் சுய புக்தி நடக்கத் தொடங்கி அடுத்த ஆண்டு இறுதிவரை நடக்கும். இது தசா சந்தி காலமாக அமைவதால் புத புக்தியிலிருந்து சனிபகவானின் தசை சுபமாக வேலை செய்யத் தொடங்கும். அவரின் உடல்நலம், மனவளம் இரண்டும் மேலோங்கத் தொடங்கி சாதாரணமாக மாணாக்கர் போலாகி விடுவார். துலாம் லக்னத்திற்கு சனிபகவான் ராஜயோக காரகர் என்று அழைக்கப்படுகிறார். ஒரு திரிகோண ராசிக்கும் ஒரு கேந்திர ராசிக்கும் ஆதிபத்யம் உண்டாகும் கிரகத்தை யோக காரகர் என்று அழைக்கிறோம். இதில் கேந்திர ஆதிபத்யத்திற்கு உட்பட்ட கிரகம் கேந்திராதிபத்ய தோஷம் பெற்றிருக்கக்கூடாது. அதனால் சுப கிரகங்களுக்கு ராஜயோக காரகர் என்பது உண்டாகாது.
     ரிஷப லக்னத்திற்கு சனிபகவான் ஒன்பது, பத்து ஆகிய இரண்டு வீடுகளுக்கு ஆதிபத்யம் பெறுவதால் தர்மகர்மாதிபதியாகிறார். கடக லக்னத்திற்கு செவ்வாய்பகவான் ஐந்து, பத்தாம் வீடுகளுக்கும், சிம்ம லக்னத்திற்கு செவ்வாய்பகவான் நான்கு, ஒன்பதாம் வீடுகளுக்கும் அதிபதியாக வருவதால் யோக காரகர் என்று அழைக்கப்படுகிறார்கள். இதில் ரிஷப , சிம்ம ராசிகளுக்கு ஒன்பதாம் வீடு பாதக ஸ்தானமான ஆவதால் யோகாதிபத்யத்தில் ஒரு மாற்று குறைகிறது. கடக லக்னத்திற்கு செவ்வாய் பகவானுக்கு முதல் வீடு, திரிகோண ராசியாக ஆவதால் முழுமையான பலன் உண்டாகாது.
     துலாம் லக்னத்திற்கு சுக ஸ்தானமான நான்காம் வீடு கேந்திர வீடாகவும், இரண்டாம் வீடு, ஐந்தாம் வீடாக திரிகோண வீடாகவும் ஆவதால் சனிபகவான் ராஜயோக காரகர் என்று அழைக்கப்படுகிறார். அதனால் சனிபகவானின் தசையில் அவரின் உடல்நிலை அடுத்தவர்களின் உதவியின்றி அவரே தன் செயல்களைச் செய்து கொள்ளக்கூடிய அளவிற்கு முன்னேறிவிடும் என்று உறுதியாகக் கூறலாம். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும்.
     
     
     
     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    ->
    flipboard facebook twitter whatsapp