என் மகனுக்கு செவ்வாய் தசை முடிந்து ராகு தசை எப்போது வருகிறது. எதிர்காலம் எவ்வாறு இருக்கும்? பரிகாரம் ஏதும் செய்ய வேண்டுமா? வேலையில் முன்னேற்றம் ஏற்படுமா? எனக்கு இரு வருடங்களில் இரண்டு தடவை அறுவை சிகிச்சை செய்து அதன் பாதிப்பு சிறிதளவு இன்னமும் இருக்கிறது. எனக்கு சந்திர தசை எப்போது வருகிறது. பரிகாரம் ஏதும் செய்ய வேண்டுமா? தொழில் ஸ்தானம் எவ்வாறு உள்ளது? - வாசகர், திருநெல்வேலி

உங்கள் மகனுக்கு விருச்சிக லக்னம், சிம்ம ராசி. லக்னாதிபதி பத்தாம் வீட்டில் அமர்ந்து சந்திர மங்கள யோகம் உண்டாகிறது.

உங்கள் மகனுக்கு விருச்சிக லக்னம், சிம்ம ராசி. லக்னாதிபதி பத்தாம் வீட்டில் அமர்ந்து சந்திர மங்கள யோகம் உண்டாகிறது. தனம் வாக்கு குடும்பம் மற்றும் பூர்வபுண்ணியாதிபதியான குருபகவான் இரண்டாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்து புதபகவானுடன் இணைந்திருக்கிறார். அதோடு குருபகவானின் பார்வை தொழில் ஸ்தானத்தின் மீதும் படிகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் மீதி பாடங்களையும் படித்து முடித்து விடுவார். தொடர்வதும் லாப ஸ்தானத்திலுள்ள ராகுபகவானின் தசையாக அமைவதால் நன்மைகளே தொடரும். உங்களுக்கு தற்சமயம் சந்திரபகவானின் தசையில் ராகுபகவானின் புக்தி அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை நடக்கும். அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து உங்கள் உடல்நலம், மனவளம் இரண்டும் மேலோங்கும். செய்தொழிலில் அபிவிருத்தியைக் காண்பீர்கள். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com