Enable Javscript for better performance
என் பேரன் ஜாதகம் எவ்வாறு உள்ளது? என்ன யோகங்கள் உள்ளன. லக்ன, சந்திர கேந்திரத்திலிருந்து நான்கு கேந்தி- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    என் பேரன் ஜாதகம் எவ்வாறு உள்ளது? என்ன யோகங்கள் உள்ளன. லக்ன, சந்திர கேந்திரத்திலிருந்து நான்கு கேந்திரங்களிலும் கிரகங்கள் உள்ளன. அதோடு லக்னத்திலிருந்து 4- ஆம் இடம் வரை தொடர்ந்து கிரகங்கள் இருக்கின்றன. இவைகளின் பலன் என்ன? செவ்வாயுடன் கேது சேர்ந்திருப்பது தோஷமா? தற்சமயம் நடக்கும் பாதகாதிபதியான சனிபகவானின் தசை எவ்வாறு இருக்கும்? கல்வி, எதிர்காலம் எப்படி அமையும்? பரிகாரம் ஏதும் செய்ய வேண்டுமா?  - வாசகர், தென்காசி

    By   |   Published On : 28th June 2019 10:53 AM  |   Last Updated : 28th June 2019 10:53 AM  |  அ+அ அ-  |  

    உங்கள் பேரனுக்கு மேஷ லக்னம், கடக ராசி, பூசம் நட்சத்திரம். சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கு அதிபதியான சந்திரபகவான் சுக ஸ்தானத்திலேயே சனிபகவானின் சாரத்தில் (பூசம் நட்சத்திரம்) ஆட்சி பெற்று நவாம்சத்தில் சிம்ம ராசியில் அமர்ந்து இருக்கிறார். சுகாதிபதி சுக ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பது சிறப்பு. லக்னம் மற்றும் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய்பகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் சூரியபகவானின் சாரத்தில் (உத்திராடம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மீன ராசியை அடைகிறார்.
     லக்னாதிபதி உச்சம் பெற்றிருப்பது என்பது ஒரு ஜாதகத்திற்கு முழுமையான பலம் கூட்டும் அமைப்பாகும். உச்ச கேந்திரத்தில் லக்னாதிபதி உச்சம் பெற்று அமர்ந்து பஞ்சமகா புருஷ யோங்களில் ஒன்றான ருசக யோகத்தைப் பெறுவது கூடுதல் சிறப்பாகும். இதனால் அவரை " வாழப்பிறந்தவர்' என்று அழைக்கலாம். தைரியத்திற்கு செவ்வாய்பகவான் என்பார்கள். உச்சம் பெற்றுள்ள செவ்வாய் தன்னம்பிக்கையையும் கூட்டுவார். செவ்வாய், லக்னம் மற்றும் எட்டாம் வீட்டுக்கும் அதிபதியாகி பத்தாம் வீட்டில் அமர்ந்திருப்பதால் லக்னம் மற்றும் எட்டாம் வீடு ஆகிய இரண்டும் வலுவடைகிறது என்றும் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது " பாவாத் பாவம்' என்கிற அடிப்படையில் இதை பார்க்க வேண்டும்.
     பூர்வபுண்ணிய புத்திர புத்தி ஸ்தானாதிபதியான சூரியபகவான் தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டில் சுய சாரத்தில் (கிருத்திகை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கும்ப ராசியை அடைகிறார். பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும், அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் களத்திர, நட்பு ஸ்தானத்தில் சுய சாரத்தில் (விசாக நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மேஷ ராசியை அடைகிறார். தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும், களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிரபகவான் தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டில் செவ்வாய்பகவானின் சாரத்தில் (மிருகசீரிஷ நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் விருச்சிக ராசியை அடைகிறார். தைரிய ஸ்தானமான மூன்றாம் ராசிக்கும், ருணம் (கடன்) ரோகம் (வியாதி) சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும் அதிபதியான புதபகவான் லக்ன கேந்திரத்தில் சுக்கிரபகவானின் சாரத்தில் (பரணி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் சிம்ம ராசியை அடைகிறார்.
     தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான சனிபகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் சுக்கிரபகவானின் சாரத்தில் (பூராடம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் சிம்ம ராசியை அடைகிறார். ராகுபகவான் நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் சனிபகவானின் சாரத்தில் (பூசம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் விருச்சிக ராசியை அடைகிறார். கேதுபகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் சந்திரபகவானின் சாரத்தில் (திருவோணம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் ரிஷப ராசியை அடைகிறார்.
     பாக்கியாதிபதியான குருபகவானின் ஐந்தாம் பார்வை லாப ஸ்தானமான பதினான்றாம் வீட்டின் மீதும், ஏழாம் பார்வை லக்னத்தின் மீதும் அங்கு அமர்ந்திருக்கும் புதபகவானின் மீதும், ஒன்பதாம் பார்வை மூன்றாம் வீட்டின் மீதும் அங்கு அமர்ந்திருக்கும் சுக்கிரபகவானின் மீதும் படிகிறது. லக்னத்தில் புதபகவான் திக்பலம் பெற்று அமர்ந்து இருப்பதால் கல்வி வேள்விகளில் சிறந்து விளங்குவார் என்று கூறவேண்டும். அதோடு குருபகவானின் பார்வையை பெற்றிருப்பதால் கல்வியில் மேன்மையான சிறப்புகளைப் பெறுவார். கல்வி ஸ்தானத்தில் கல்வி ஸ்தானாதிபதி ஆட்சி பெற்று இருப்பதும் சிறப்பு. சந்திரபகவானுடன் ராகுபகவானும் இணைந்திருக்கிறார். பொதுவாக, சந்திரபகவானுடன் ஒரு கிரகம் சேரும் போது அக்கிரகத்தின் தன்மை அதிகரிக்கிறது. இதனால் பார்வதி தேவியின் அருள் கிட்டும். வாக்குபலிதம் உண்டாகும். ஆட்சி பெற்ற சந்திரபகவானும் உச்சம் பெற்ற செவ்வாய்பகவானும் ஒருவரை ஒருவர் பார்வை செய்து கொள்வதால் முழுமையான சந்திரமங்கள யோகம் உண்டாகும். இதனால் நிலம், வீடு போன்ற அசையாச் சொத்துகளின் மூலம் லாபம் கிடைக்கும். அதோடு குருபகவான் சந்திரகேந்திரத்திலும் செவ்வாய்பகவானின் கேந்திரத்திலும் இருப்பதால் முறையே கஜகேசரி யோகம், குருமங்கள யோகம் ஆகிய சிறப்பான யோகங்கள் உண்டாகின்றன.
     லக்னம் முதல் நான்கு கேந்திரங்களிலும் கிரகங்கள் இருப்பது சதுர்கேந்திர யோகம் என்றழைக்கப்படுகிறது. அவருக்கு இந்த யோகமானது ராசியிலிருந்தும் உண்டாகிறது. இது ஒரு சிறப்பான யோகமாகும். இதனால் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து அத்தியாவசியங்களும் பூர்த்தியாகி விடும் என்று கூறலாம். அதோடு பூர்வபுண்ணியாதிபதி மற்றும் பாக்கியாதிபதியான சூரிய, குருபகவான்கள் சுயசாரத்தில் அமர்ந்திருப்பதும் ஜாதகத்திற்கு வலுசேர்க்கிறது. லக்னத்திலிருந்து தொடர்ந்து நான்கு ராசிகளில் கிரகங்கள் அமர்ந்திருப்பதும் சிறப்பு. அதோடு லக்னம் மற்றும் மூன்றாம் வீட்டிற்கும் குருபகவானின் பார்வை கிடைக்கிறது. அதனால் இந்த நான்கு பாவங்களின் பலன்கள் நல்லமுறையில் கிடைக்கும் என்று கூறவேண்டும். " குஜ வத் கேது' என்பது ஜோதிட வழக்கு.
     கேதுபகவானைப் போன்று செவ்வாய்பகவான் பலன் தருவார் என்று பொருள். அதனால் செவ்வாய், கேது பகவான்களின் இணைவு நன்மையே செய்யும் என்று பொருள். அதனால் செவ்வாய், கேது பகவான்களின் இணைவு நன்மையே செய்யும் என்று கூறவேண்டும்.
     சர லக்னத்திற்கு பதினொன்றாமதிபதி பாதகாதிபதி என்பது ஜோதிட விதியாகும். பாதகாதிபதியான சனிபகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தசையை நடத்துவதால் படிப்படியான யோகபாக்கியங்களும் பொருளாதார மேன்மையும் உண்டாகும். எதிர்காலம் வளமாக அமையும். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும்.
     
     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp