என் மகனுக்கு எப்போது திருமணம் நடைபெறும்? சர்ப்ப தோஷ பரிகாரம் செய்துள்ளோம். வேறு பரிகாரங்கள் செய்ய வேண்டுமா? எத்திசையில் பெண் கிடைக்கும்? - வாசகர், உடுமலை
By DIN | Published On : 08th March 2019 10:27 AM | Last Updated : 08th March 2019 10:27 AM | அ+அ அ- |

உங்கள் மகனுக்கு மகர லக்னம், மிதுன ராசி. லக்னத்தில் ராகுபகவானும் களத்திர ஸ்தானத்தில் கேதுபகவானும் இருப்பது சர்ப்ப தோஷத்தைக் கொடுக்கிற அம்சமாகும். களத்திர ஸ்தானத்தில் அஷ்டமாதிபதி இருப்பது சிறு குறை என்றாலும் பாக்கியாதிபதி இணைந்திருப்பது சிறப்பாகும். அதோடு களத்திர ஸ்தானாதிபதி பூர்வபுண்ணியாதிபதியுடன் இணைந்திருக்கிறார். தற்சமயம் லக்னாதிபதியான சனிபகவானின் தசை நடப்பதும் சிறப்பாகும். அவருக்கு அடுத்த ஆண்டு இறுதிக்குள் படித்த நல்ல வேலையிலுள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். தென்கிழக்கு திசையிலிருந்து பெண் அமைவார். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.