சுடச்சுட

    

    எனக்கு 84 வயதாகிறது. எனக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்றேன். இதை கண்டம் ஏற்பட்டதாக எண்ணலாமா? ஆயுள் எவ்வாறு உள்ளது? எனது நண்பர் வாங்கிய கடன் தொகை ஓரளவாவது திரும்ப வருமா?  - வாசகர், கோயம்புத்தூர்

    By DIN  |   Published on : 15th March 2019 10:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உங்களுக்கு மேஷ லக்னம், மேஷ ராசி. லக்னாதிபதியான செவ்வாய்பகவான் நீச்சபங்க ராஜயோகம் பெற்றிருக்கிறார். ஆயுள்காரகரான சனிபகவான் சச மகா யோகம் பெற்று கர்ம ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். பாக்கியாதிபதியான குருபகவான் ஆறாமதிபதியுடன் நட்பு ஸ்தானத்தில் இணைந்து லாப ஸ்தானம், லக்னம் மற்றும் தைரிய ஸ்தானங்களைப் பார்வை செய்கிறார். கஜகேசரி யோகம் முழுமையாக உண்டாகிறது. தற்சமயம் சனிபகவானின் தசையில் கேதுபகவானின் புக்தி நடக்கிறது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் வெளியில் கொடுத்திருந்த பணம் திரும்ப கைவந்து சேரும். இறுதிவரை ஆரோக்கியம் சீராகவே இருக்கும். பிரதி சனிக்கிழமைகளில் சனி பகவானை வழிபட்டு வரவும். இறுதிக்காலம் அமைதியாகக் கழியும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai