சுடச்சுட

    

    என்னுடைய கடைசி காலங்கள் எவ்வாறு இருக்கும்? எனது இடது காலில் புண் ஏற்பட்டு நடக்க முடியவில்லை. மருத்துவம் பார்த்தும் இன்னும் சரியாகவில்லை. ஆயுள் எவ்வாறு உள்ளது? இடை காலத்தில் ஏதாவது இன்னல்கள் ஏற்படுமா?  - வாசகர், தூத்துக்குடி

    By DIN  |   Published on : 15th March 2019 10:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உங்களுக்கு சிம்ம லக்னம், மேஷ ராசி. சனிபகவான் களத்திர, நட்பு ஸ்தானத்தில் குருபகவானின் சாரத்தில் அமர்ந்து இருப்பது சிறப்பு. ஆயுள் ஸ்தானாதிபதியான குருபகவான் சுக ஸ்தானத்தில் அமர்ந்து ஆயுள் ஸ்தானத்தையும் கர்ம ஸ்தானத்தையும் அங்கு அமர்ந்திருக்கும் சூரியன், செவ்வாய், புதபகவான்களையும் அயன ஸ்தானத்தையும் பார்வை செய்கிறார். தற்சமயம் சனிபகவானின் தசையில் கேதுபகவானின் புக்தி நடக்கத் தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குப்பிறகு காலில் உள்ள புண் முழுமையாக ஆறிவிடும். இறுதிக்காலம் அமைதியாகக் கழியும். பிரதி தினமும் "நமசிவாய' என்று முடிந்தவரை ஜபித்து வரவும்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai