அமெரிக்காவில் பணிபுரியும் என் மகனுக்கு திருமணம் எப்போது கைகூடும்? உறவில் திருமணம் அமையுமா? - வாசகி, கோயம்புத்தூர்

உங்கள் மகனுக்கு கடக லக்னம், விருச்சிக ராசி. சர்ப்ப தோஷம் உள்ளது. தனாதிபதியும் சுகாதிபதியும் லக்னாதிபதியும் நீச்சபங்க ராஜயோகம் பெற்றிருக்கிறார்கள்

உங்கள் மகனுக்கு கடக லக்னம், விருச்சிக ராசி. சர்ப்ப தோஷம் உள்ளது. தனாதிபதியும் சுகாதிபதியும் லக்னாதிபதியும் நீச்சபங்க ராஜயோகம் பெற்றிருக்கிறார்கள். பாக்கியாதிபதியான குருபகவான் சுக்கிரபகவானையும் லக்னாதிபதியையும் களத்திர ஸ்தானத்தையும் பார்வை செய்கிறார். புத்திர ஸ்தானாதிபதி பாக்கிய ஸ்தானத்தில் இருக்கிறார். களத்திர ஸ்தானாதிபதி ஆறாம் வீட்டில் மறைவு பெற்றிருப்பது சிறு குறை. தற்சமயம் கேது மகாதசையில் சுக்கிர புக்தி நடப்பதால் இந்த ஆண்டு இறுதிக்குள் படித்த பெண் அமைந்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் கைகூடும். இன்னும் பத்தாண்டுகள் வெளிநாட்டில் வசிக்க வாய்ப்புள்ளது. பிரதி செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானை வழிபட்டு வரவும். எதிர்காலம் சிறப்பாக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com