எனக்கு 25 வயதாகிறது. 2014- இல் பொறியியல் படிப்பு முடிந்தது. 2015 -இல் திருமணம். 2016 -இல் குழந்தை. 2017- இல் என் கணவருக்கு விபத்தாகி தற்சமயம் வேலைக்குச் செல்கிறார். என் ஜாதகத்தைப் பார்த்தவர்கள் நல்ல ஜாதகம் என்று கூறினார்கள். நான் தற்போது குறைந்த சம்பளத்தில் நூலகராகப் பணியாற்றுகிறேன். எனக்கு எதுவும் நல்லதே நடக்கவில்லை. எனக்கு திறமை தைரியம் எல்லாம் இருக்கிறது. ஆனால் அதை பயன்படுத்த கடவுள் ஒரு வாய்ப்பு தரவில்லை. எனக்கு அரசு வேலை கிடைத்து விட்டால் என் குடும்பத்தை சுலபமாக நிர்வகிக்க முடியும் என்று

உங்களுக்கு சிம்ம லக்னம், பூராடம் நட்சத்திரம், இரண்டாம் பாதம், தனுசு ராசி. அயன ஸ்தானாதிபதியான சந்திரபகவான் பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானத்தில் சுக்கிரபகவானின் சாரத்தில் (பூராடம் நட்சத்திரம்) அமர்ந்து

உங்களுக்கு சிம்ம லக்னம், பூராடம் நட்சத்திரம், இரண்டாம் பாதம், தனுசு ராசி. அயன ஸ்தானாதிபதியான சந்திரபகவான் பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானத்தில் சுக்கிரபகவானின் சாரத்தில் (பூராடம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கன்னி ராசியை அடைகிறார். லக்னாதிபதியான சூரியபகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் குருபகவானின் சாரத்தில் (பூரட்டாதி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கடக ராசியை அடைகிறார். தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான புதபகவான் களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டில் ராகுபகவானின் சாரத்தில் (சதய நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தன் நீச்ச ராசியான மீன ராசியை அடைகிறார். தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிரபகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் புதபகவானின் சாரத்தில் (ரேவதி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கும்ப ராசியை அடைகிறார்.
 சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய் பகவான் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டில் ராகுபகவானின் சாரத்தில் (திருவாதிரை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மீன ராசியை அடைகிறார். ருணம் (கடன்) ரோகம் (வியாதி) சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும் களத்திர , நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் அதிபதியான சனிபகவான் களத்திர நட்பு ஸ்தானத்தில் செவ்வாய்பகவானின் சாரத்தில் (அவிட்ட நட்சத்திரம்) மூலதிரிகோணம் பெற்று அமர்ந்து நவாம்சத்தில் தன் உச்ச ராசியை அடைகிறார். பூர்வபுண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டில் சந்திரபகவானின் சாரத்தில் (அஸ்த நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மிதுன ராசியை அடைகிறார். ராகுபகவான் சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் புதபகவானின் சாரத்தில் (கேட்டை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மகர ராசியை அடைகிறார். கேதுபகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் சந்திரபகவானின் சாரத்தில் (ரோகிணி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கடக ராசியை அடைகிறார்.
 உங்களுக்கு லக்னாதிபதி சூரியபகவானாவார். அவர் தனித்தியங்கும் பலத்தைப் பெற்றவர். குறிப்பாக, அதிகாரம் என்ற சொல்லுக்கு காரணமாகிறார். நவக்கிரகங்களில் முதன்மையானவர். இவர் பிரதமாதிபன் என்று அழைக்கப்படுகிறார். சூரியபகவானுக்கும் அரசாங்கத்திற்கும் நெருங்கியத் தொடர்பு உண்டு. அப்படிப்பட்ட சூரியபகவான் அஷ்டம ஸ்தானம் என்கிற புதையல் ஸ்தானத்தில் குருபகவானின் சாரத்தில் அமர்ந்திருக்கிறார். குருபகவானை ராஜகிருபாகாரகர் என்று அழைப்பார்கள். அதாவது ஆளுபவர்களின் கருணையை அருளைப் பெற்றுத் தருபவர் என்று கூறவேண்டும். குருபகவான் சூரியபகவான் அமர்ந்திருக்கும் நட்சத்திரத்திற்கும் வீட்டிற்கும் அதிபதியாகிறார். குருபகவான் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்து ஐந்தாம் பார்வையாக சர்வீஸ் வீடான ஆறாம் வீட்டைப் பார்வை செய்கிறார். ஆறாம் வீடு வலுத்திருந்தால் ஓய்வு பெறும் வரை உத்தியோகம் பார்க்கும் யோகம் உண்டாகும். அதோடு அந்த வீட்டின் அதிபதியான சனிபகவானும் வலுத்திருக்கிறார். குருபகவானின் ஏழாம் பார்வை எட்டாம் வீட்டின் மீதும் அங்கு அமர்ந்திருக்கும் சூரியபகவான் மற்றும் உச்சம் பெற்றுள்ள தொழில் ஸ்தானாதிபதியான பத்தாம் வீட்டின் மீதும் அங்கு அமர்ந்திருக்கும் கேதுபகவானின் மீதும் படிகிறது. "பத்தில் ஒரு பாவி' என்பதும் ஜோதிட வழக்காகும்.
 தொழில் ஸ்தானாதிபதி உச்சம் பெற்றிருப்பது சிறப்பென்பதை அனைவரும் அறிந்ததே. அவர் சந்திர கேந்திரத்தில் உச்சம் பெற்று அமர்ந்திருப்பது பஞ்சமகா புருஷ யோகங்களில் ஒன்றான மாளவிகா யோகத்தைக் கொடுக்கிறது. இதனால் உத்தியோகம் சிறப்பாக அமைந்து நல்ல நிலையில் அமரும் யோகம் உண்டாகும். அதோடு சுக்கிரபகவானின் காரகத்துவங்களான வீடு, வாகனம் ஆகியவை சிறப்பாகவே அமைந்துவிடும் என்றும் புரிந்து கொள்ள வேண்டும். சுக்கிரபகவான் புதபகவானின் சாரத்தில் உள்ளதால் நவீன விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட துறைகள் அதாவது கணினியை நுட்பம் கொண்டு குற்றங்களைக் கண்டு பிடித்தல் போன்ற துறைகளிலும் வேலை அமையும்.
 குருபகவான் சூரியபகவானைப் பார்வை செய்வதால் சிவராஜயோகம் உண்டாகிறது. குருபகவானுக்கு நான்காம் வீட்டில் சந்திரபகவான் இருப்பது கஜகேசரி யோகத்தைக் கொடுக்கிறது. இதனால் சுக விருத்தி, தன விருத்தி, கடன், நோய் தொல்லைகள் இல்லை என்ற நிலையும் எதிர்ப்புகளால் பாதிப்புகள் ஏற்படாத நிலையும் உருவாகிறது. சந்திரபகவானுக்கு ஏழாம் வீட்டில் பாக்கியாதிபதியான செவ்வாய்பகவான் அமர்ந்திருப்பதால் முழுமையான சந்திர மங்கள யோகம் உண்டாகிறது. செவ்வாய் கிரகமும் அரசு கிரகமாகும். அவர் பாக்கியாதிபதியாகி லாப ஸ்தானத்தில் அமர்ந்திருப்பது அரசு வகையில் நன்மைகள் உண்டாகும் என்று கூற வேண்டும். மேலும் அவர் குருபகவானின் கேந்திரத்தில் அமர்ந்திருக்கிறார். இதனால் குருமங்கள யோகமும் உண்டாகிறது. பொதுவாக, லக்னத்திற்கோ அல்லது ராசிக்கோ (சந்திரபகவான் இருக்குமிடத்தை ராசி என்று கூறுகிறோம்) நான்கு கேந்திரங்களிலும் கிரகங்கள் இருந்தால் அது ஒரு வலுவான அமைப்பாகும். இதை சதுர்கேந்திர யோகம் என்று கூறுவார்கள். இந்த கிரகங்கள் சுபக்கிரகங்களாக இருந்தாலும் அசுபக்கிரகங்களாக இருந்தாலும் பாதிப்பில்லை. இந்த யோகம் வாழ்க்கையில் ஓர் உன்னதமான இடத்தைப் பிடித்துக் கொடுத்து விடும்.
 களத்திர, நட்பு ஸ்தானத்தில் சனிபகவான் மூலதிரிகோணம் பெற்று ராசியிலும் அம்சத்திலும் வலுவாக இருப்பது உன்னதமான அமைப்பாகும். ஏழாம் வீட்டில் சனிபகவான் திக்பலம் பெறுவார் என்பதையும் அனைவரும் அறிந்ததே. சனிபகவான் கேந்திர ஸ்தானத்தில் ஆட்சி பெற்றிருப்பதால் பஞ்சமகா புருஷ யோகங்களிலொன்றான சச மகா யோகம் உண்டாகிறது. பொதுவாக, சனிபகவான் வலுத்தால் மக்கள் தொண்டாற்றிடும் பதவிகள் தேடிவரும். சமூக நல திட்டங்களைத் தீட்டி செயல்படுத்துவார்கள். வாழ்க்கைத்தரம் குறைந்தவர்களை தூக்கி விட்டு அவர்கள் வாழ்க்கை மேன்மையடையப் பாடுபடுவர்களுக்கு சனிபகவான் சுபபலத்துடன் இருப்பார். அதனால் உங்களுக்கு அரசு உத்தியோகம் உறுதியாகக் கிடைக்கும்.
 தற்சமயம் உங்களுக்கு சுக்கிரபகவானின் தசையில் சனிபகவானின் புக்தி இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை நடக்கும். இது ஏழரை நாட்டுச்சனியில் முதல் சுற்றாக அமைந்து ஜன்ம சனியாக நடக்கிறது. அதனால் வாழ்க்கையில் முன்னேற்றங்கள் ஏற்பட ஏதுவான காலகட்டமாக அமைவதால் இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் உங்கள் தகுதிக்கேற்ற அரசு உத்தியோகம் கிடைக்கும். குருபகவானும் புத்திர ஸ்தானமும் வலுவாக உள்ளதால் உங்கள் குழந்தையின் வளர்ச்சியும் சீராகவே அமையும். எதிர்காலம் வளமாக அமையும். பிரதி திங்கள் கிழமைகளில்அம்மனை வழிபட்டு வரவும். முடிந்தால் தினமும் அபிராமி அந்தாதியை படித்து வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com