நான் தற்போது அரசு தேர்வுக்கு படித்து வருகிறேன். எப்போது அரசு வேலை கிடைக்கும்? பரிகாரம் எதுவும் செய்ய வேண்டுமா? - வாசகர், சேலம்

உங்களுக்கு கன்னி லக்னம், மகர ராசி, லக்னம் மற்றும் தொழில் ஸ்தானத்திற்கு அதிபதியான புதபகவான் லக்னத்தில் ஆட்சி உச்சம் மூலதிரிகோணம் பெற்று அமர்ந்திருக்கிறார்.

உங்களுக்கு கன்னி லக்னம், மகர ராசி, லக்னம் மற்றும் தொழில் ஸ்தானத்திற்கு அதிபதியான புதபகவான் லக்னத்தில் ஆட்சி உச்சம் மூலதிரிகோணம் பெற்று அமர்ந்திருக்கிறார். தன பாக்கியாதிபதியான சுக்கிரபகவான் தன ஸ்தானத்தில் மூலதிரிகோணம் பெற்று அமர்ந்திருக்கிறார். பூர்வபுண்ணிய புத்திர புத்தி மற்றும் ஆறாம் வீட்டிற்கும் அதிபதியான சனிபகவான் தைரிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். அயன ஸ்தானாதிபதியான சூரியபகவான் அயன ஸ்தானத்திலேயே ஆட்சி பெற்றிருக்கிறார். சுக, களத்திர நட்பு ஸ்தானத்திற்கு அதிபதியான குருபகவான் ஆறாம் வீட்டில் சுயசாரத்தில் கேந்திராதிபத்ய தோஷம் நீங்கப் பெற்று தொழில் ஸ்தானம், அயன ஸ்தானம் அங்கு அமர்ந்திருக்கும் சூரியபகவான், தன ஸ்தானம் அங்கு ஆட்சி பெற்று அமர்ந்திருக்கும் சுக்கிரபகவான் ஆகிய முக்கிய இடங்களைப் பார்வை செய்வது சிறப்பு. இதனால் அரசு வேலை இந்த ஆண்டுக்குள் கிடைக்கும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையம்மனை வழிபட்டு வரவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com