நான் மிக்ஸி, கிரைண்டர் சர்வீஸ் செய்து வருகிறேன். போதிய வருமானம் வரவில்லை. சிறிய கடை வைக்கலாமா? இன்னும் திருமணமும் ஆகவில்லை. எப்போது திருமணம் அமையும்? தந்தையின் ஆயுள் எப்படி இருக்கிறது? - வாசகர், ஒட்டன்சத்திரம்

உங்களுக்கு மேஷ லக்னம், மேஷ ராசி. லக்னாதிபதி மூன்றாம் வீட்டில் மூன்றாமதிபதியோடு இணைந்து பாக்கிய ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார்கள். தர்மகர்மாதிபதிகள் ஆறாம் வீட்டில் இணைந்திருப்பதும் சிறப்பு.

உங்களுக்கு மேஷ லக்னம், மேஷ ராசி. லக்னாதிபதி மூன்றாம் வீட்டில் மூன்றாமதிபதியோடு இணைந்து பாக்கிய ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார்கள். தர்மகர்மாதிபதிகள் ஆறாம் வீட்டில் இணைந்திருப்பதும் சிறப்பு. குருபகவானின் பார்வை தொழில் ஸ்தானத்தின் மீதும் அங்கு அமர்ந்திருக்கும் கேதுபகவானின் மீதும் அயன ஸ்தானம் மற்றும் குடும்ப ஸ்தானத்தின் மீதும் படிகிறது. தற்சமயம் ராகுபகவானின் தசையில் சுகாதிபதியின் புக்தி நடக்கிறது. இந்த காலகட்டத்தில் கோசாரமும் நன்றாக இருப்பதால் இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குப்பிறகு உங்கள் செய்தொழிலில் வருமானம் படிப்படியாக உயரத் தொடங்கும். குருபகவானின் தசையும் வளமாக அமையும். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும். அடுத்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் நடந்தேறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com