என் மகனுக்கு எப்போது திருமணம் நடைபெறும்? ஆயுள் எவ்வாறு உள்ளது? தோஷம் உள்ளதா? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? - வாசகர், நன்னிலம்
By DIN | Published On : 22nd March 2019 02:41 PM | Last Updated : 22nd March 2019 02:41 PM | அ+அ அ- |

உங்கள் மகனுக்கு கடக லக்னம், களத்திர ஸ்தானத்தில் ராகுபகவானுடன் செவ்வாய், சுக்கிர பகவான்கள் இணைந்திருப்பதற்கேற்ற சமதோஷம் பார்த்து சேர்க்க வேண்டியது அவசியம். மற்றபடி ஆறாம் வீட்டில் சனிபகவான் அமர்ந்து குருபகவானால் பார்க்கப்படுவதால் தீர்க்காயுள் மற்றும் படித்த மனைவி அமைவார். சூரிய, புத பகவான்கள் அஷ்டம ஸ்தானத்தில் அமர்ந்து குருபகவானின் பார்வையை பெறுவதால் தந்தைக்கு மேன்மை உண்டாகும். தற்சமயம் அவருக்கு குரு பகவானின் தசையில் சுக்கிர புக்தி அடுத்த ஆண்டு இறுதிவரை நடப்பதால் இந்த காலகட்டத்திற்குள் திருமணம் கைகூடும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும் முருகப்பெருமானையும் வழிபட்டு வரவும்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...