Enable Javscript for better performance
எனக்கு அரசுத் தேர்வில் வெற்றிகிடைக்குமா? அரசாங்க வேலை கிடைக்குமா? - வாசகர், வலங்கைமான்- Dinamani

சுடச்சுட

    

    எனக்கு அரசுத் தேர்வில் வெற்றிகிடைக்குமா? அரசாங்க வேலை கிடைக்குமா?  - வாசகர், வலங்கைமான்

    By DIN  |   Published on : 10th May 2019 10:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உங்களுக்கு மகர லக்னம், மிதுன ராசி. லக்னத்தில் லக்னாதிபதி ஆட்சி பெற்று அமர்ந்து பஞ்சமகா புருஷ யோகங்களில் ஒன்றான சச மகாயோகத்தைக் கொடுக்கிறார். அதோடு குருபகவான் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்து லக்னம், தைரியம், பூர்வபுண்ணிய ஸ்தானங்களை பார்வை செய்கிறார். பாக்கியாதிபதியான புதபகவான் லாப ஸ்தானத்தில் அமர்ந்து பூர்வபுண்ணிய ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். பூர்வபுண்ணியாதிபதியான சுக்கிரபகவான் களத்திர நட்பு ஸ்தானாதிபதியான சந்திரபகவானுக்கும் குருபகவானுக்கும் கேந்திர ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதும் சிறப்பு. தற்சமயம் சனிமகா தசையில் பாக்கியாதிபதியான புதபகவானின் புக்தி நடக்கிறது. சுக்கிரபகவானின் புக்தியில் முற்பகுதியில் அரசு வேலை கிடைக்கும். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai