Enable Javscript for better performance
எனக்கு திருமணமாகி ஓர் ஆண்டு ஆகிவிட்டது. எங்களுக்கு புத்திர பாக்கியம், எதிர்காலம் எவ்வாறு உள்ளது? எனக- Dinamani

சுடச்சுட

    

    எனக்கு திருமணமாகி ஓர் ஆண்டு ஆகிவிட்டது. எங்களுக்கு புத்திர பாக்கியம், எதிர்காலம் எவ்வாறு உள்ளது? எனக்கு எப்போது அரசு வேலை கிடைக்கும்?  - வாசகர், விழுப்புரம்

    By DIN  |   Published on : 10th May 2019 10:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உங்களுக்கு துலாம் லக்னம், கும்ப ராசி. லக்னம் மற்றும் எட்டாம் வீட்டிற்கு அதிபதியான சுக்கிரபகவான் தைரிய ஸ்தானத்தில் விபரீத ராஜயோகம் பெற்று சுக, பூர்வபுண்ணியாதிபதியான சனிபகவான் மற்றும் லாபாதிபதியான சூரியபகவான்களுடன் இணைந்திருக்கிறார். பாக்கியாதிபதி சுக ஸ்தானத்தில் அமர்ந்து புத்திர காரகரான குருபகவானால் பார்க்கப்படுகிறார். உங்களுக்கு தற்சமயம் குருபகவானின் தசையில் இறுதிப்பகுதி நடக்கிறது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குப்பிறகு ஒன்றரை ஆண்டுக்குள் மழலை பாக்கியம் உண்டாகும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai