சுடச்சுட

    

    எனது பேத்திக்கு எப்போது திருமணம் நடைபெறும்? வேலைவாய்ப்பு எப்போது கிட்டும்?  - வாசகர், காயல்பட்டணம்

    By DIN  |   Published on : 10th May 2019 10:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உங்கள் பேத்திக்கு மிதுன லக்னம், மிதுன ராசி. லக்னம் மற்றும் சுக ஸ்தானத்திற்கும் அதிபதியான புதபகவான் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் தைரிய ஸ்தானாதிபதியான சூரியபகவானுடன் இணைந்து புதஆதித்ய யோகத்தைப் பெறுகிறார். பூர்வபுண்ணிய புத்திர மற்றும் அயன ஸ்தானத்திற்கும் அதிபதியான சுக்கிரபகவான் லக்னத்தில் வர்கோத்தமத்தில் அமர்ந்திருக்கிறார். களத்திர, தொழில் ஸ்தானாதிபதியான குருபகவான் ஆறாம் வீட்டில் வர்கோத்தமத்தில் அமர்ந்து தொழில், அயனம் மற்றும் குடும்ப ஸ்தானங்களைப் பார்வை செய்கிறார். அதோடு தற்சமயம் குருபகவானின் தசை நடக்கிறது. அவருக்கு அடுத்த ஆண்டு இறுதிக்குள் படித்த நல்ல வேலையிலுள்ள வரன் உள்நாட்டிலேயே அமைந்து திருமணம் கைகூடும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai