சுடச்சுட

    

    என் மகனுக்கு திருமணம் எப்போது நடைபெறும்? எதனால் திருமணத்தடை ஏற்படுகிறது? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? எந்தத் திசையில் பெண் கிடைக்கும்? என் மகன் தனியார்துறையில் கணக்கராக உள்ளார். அவருக்கு அரசு வேலை கிடைக்குமா?  - வாசகர், செஞ்சி

    By DIN  |   Published on : 10th May 2019 10:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உங்கள் மகனுக்கு சிம்ம லக்னம், சிம்ம ராசி. களத்திர நட்பு ஸ்தானாதிபதியான சனிபகவான் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்து குருபகவானால் பார்க்கப்படுகிறார். லக்னாதிபதி லக்னத்தில் ஆட்சி பெற்று அமர்ந்து சுக பாக்கியாதிபதியான செவ்வாய்பகவானுடன் இணைந்திருக்கிறார். தற்சமயம் ராகுபகவானின் தசையில் குருபகவானின் புக்தி நடக்கத் தொடங்கியுள்ளதால் இன்னும் ஓராண்டுக்குள் படித்த பெண் வடகிழக்கு திசையிலிருந்து உறவில் அமைந்து திருமணம் கைகூடும். அரசு அல்லது அரசு சார்ந்த துறைகளில் உத்தியோகம் அமையும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும் முருகப்பெருமானையும் வழிபட்டு வரவும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai