Enable Javscript for better performance
என் மகனுக்கு 34 வயதாகியும் இன்னும் திருமணமாகவில்லை. ஜாதகத்தில் தோஷமுள்ளதா? இன்னும் ஏதேனும் பரிகாரம்- Dinamani

சுடச்சுட

    

    என் மகனுக்கு 34 வயதாகியும் இன்னும் திருமணமாகவில்லை. ஜாதகத்தில் தோஷமுள்ளதா? இன்னும் ஏதேனும் பரிகாரம் செய்ய வேண்டுமா? திருமணம் எப்போது நடைபெறும்?  - வாசகி, திருச்சி

    By DIN  |   Published on : 10th May 2019 10:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உங்கள் மகனுக்கு மிதுன லக்னம், மிதுன ராசி. களத்திர, நட்பு மற்றும் தொழில் ஸ்தானாதிபதியான குருபகவான் ஆறாம் வீட்டில் அமர்ந்து கர்மஸ்தானம், அயன ஸ்தானம் மற்றும் குடும்ப ஸ்தானங்களைப் பார்வை செய்கிறார். தற்சமயம் அஷ்டம, பாக்கியாதிபதியான சனிபகவான் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் உச்சம் பெற்று தசையை நடத்துகிறார். அவருக்கு அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் தகுந்த பெண் அந்நிய உறவில் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai