சுடச்சுட

    

    என் மகளுக்கு எப்போது திருமணம் நடைபெறும்?  - வாசகி, விழுப்புரம்

    By DIN  |   Published on : 10th May 2019 10:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உங்கள் மகளுக்கு மிதுன லக்னம், கடக ராசி. லக்னம் மற்றும் சுக ஸ்தானாதிபதியான புதபகவான் நான்காம் வீட்டில் உச்சம் பெற்று அமர்ந்திருக்கிறார். பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் தைரியாதிபதி, களத்திராதிபதி மற்றும் ராகுபகவான்களுடன் இணைந்திருக்கிறார். பாக்கியாதிபதி பாக்கிய ஸ்தானத்தில் ஆட்சி பெற்று குருபகவானால் பார்க்கப்படுகிறார். அவருக்கு தற்சமயம் சுக்கிரபகவானின் தசையில் ராகுபகவானின் புக்தி இன்னும் இரண்டாண்டுகளுக்குள் நடக்கும். இது திருமணத்திற்கு உகந்த காலமாகையால் இந்த காலகட்டத்திற்குள் படித்த நல்ல வேலையிலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai