Enable Javscript for better performance
நான் ஏதாவது உப தொழில் செய்யலாமா? எனது உடல்நிலை எப்போது பரிபூரணமாக குணமடையும்? எப்போது சொந்த வீடு கட்- Dinamani

சுடச்சுட

    

    நான் ஏதாவது உப தொழில் செய்யலாமா? எனது உடல்நிலை எப்போது பரிபூரணமாக குணமடையும்? எப்போது சொந்த வீடு கட்டும் பாக்கியம் கிட்டும்?  - வாசகர், குரோம்பேட்டை

    By DIN  |   Published on : 10th May 2019 10:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உங்களுக்கு ரிஷப லக்னம், துலாம் ராசி. லக்னம் மற்றும் ஆறாம் வீடான சேவை வீட்டிற்கும் அதிபதியான சுக்கிரபகவான் சுகஸ்தானமான நான்காம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். பூர்வபுண்ணியாதிபதி பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் உச்சம் பெற்று சுகாதிபதியுடன் இணைந்து இருக்கிறார். புத ஆதித்யர்களை குருபகவான் பார்வை செய்கிறார். தற்சமயம் தர்மகர்மாதிபதியான சனிபகவான் பத்தாம் வீட்டில் சச மகா யோகத்தைப் பெறுகிறார். அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் உபதொழில் செய்யத் தொடங்குவீர்கள். உடல் ஆரோக்கியமும் சீரடைந்து விடும். 2022 -ஆம் ஆண்டுக்குள் சொந்த வீடு கட்டுவீர்கள். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி புதன் கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai