என் மகளுக்கு எப்போது திருமணம் நடைபெறும்? - வாசகி, விழுப்புரம்

உங்கள் மகளுக்கு மிதுன லக்னம், கடக ராசி. லக்னம் மற்றும் சுக ஸ்தானாதிபதியான புதபகவான் நான்காம் வீட்டில் உச்சம் பெற்று அமர்ந்திருக்கிறார்

உங்கள் மகளுக்கு மிதுன லக்னம், கடக ராசி. லக்னம் மற்றும் சுக ஸ்தானாதிபதியான புதபகவான் நான்காம் வீட்டில் உச்சம் பெற்று அமர்ந்திருக்கிறார். பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் தைரியாதிபதி, களத்திராதிபதி மற்றும் ராகுபகவான்களுடன் இணைந்திருக்கிறார். பாக்கியாதிபதி பாக்கிய ஸ்தானத்தில் ஆட்சி பெற்று குருபகவானால் பார்க்கப்படுகிறார். அவருக்கு தற்சமயம் சுக்கிரபகவானின் தசையில் ராகுபகவானின் புக்தி இன்னும் இரண்டாண்டுகளுக்குள் நடக்கும். இது திருமணத்திற்கு உகந்த காலமாகையால் இந்த காலகட்டத்திற்குள் படித்த நல்ல வேலையிலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com