Enable Javscript for better performance
என் வாழ்க்கையில் படிப்பு இல்லாமல் போனது? வருமானம் சரியாக இல்லை. மணவாழ்க்கை எப்படி அமையும்? - வாசகர்- Dinamani

சுடச்சுட

    

    என் வாழ்க்கையில் படிப்பு இல்லாமல் போனது? வருமானம் சரியாக இல்லை. மணவாழ்க்கை எப்படி அமையும்?  - வாசகர், ஓசூர்

    By DIN  |   Published on : 17th May 2019 02:17 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உங்களுக்கு மேஷ லக்னம், மிதுன ராசி. லக்னம் மற்றும் அஷ்டம ஸ்தானத்திற்கும் அதிபதியான செவ்வாய்பகவான் பன்னிரண்டாம் வீட்டில் களத்திர ஸ்தானாதிபதியுடன் இணைந்திருக்கிறார். லக்னாதிபதி உச்சம் பெற்ற களத்திர ஸ்தானாதிபதியுடன் இணைந்து இருப்பது சிறப்பு. இதனால் மணவாழ்க்கை சிறப்பாக அமையும். தொழில் ஸ்தானாதிபதி தொழில் ஸ்தானத்தைப் பார்வை செய்வதாலும் தொழில் ஸ்தானத்தில் நீச்சபங்க ராஜயோகம் பெற்ற குருபகவான் இருப்பதாலும் செய்தொழிலில் படிப்படியான வளர்ச்சி அடைந்துவிடுவீர்கள். தற்சமயம் சனிபகவானின் தசையில் பிற்பகுதி நடக்கத் தொடங்கியுள்ளதும் சிறப்பாகும். புதஆதித்ய யோகம் , குருசந்திரயோகம், விபரீத ராஜயோகம் போன்ற சிறப்பான யோகங்கள் உள்ளதால் எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai