38 வயதான என் மகனுக்கு இன்னும் திருமணம் நடைபெறவில்லை. பலவிதமான பரிகாரங்கள் செய்தோம். திருமண யோகம் உண்டா? பல்வேறு விபத்துகளில் சிக்கியுள்ள எனது உடல்நிலை சரியாகுமா? என் மனைவிக்கு பூர்வீகச் சொத்து கிடைக்குமா? - வாசகர், ராமாபுரம்

உங்களுக்கு மேஷ லக்னம், தனுசு ராசி. லக்னாதிபதி மற்றும் ஆயுள் ஸ்தானாதிபதியான செவ்வாய்பகவான் லாப ஸ்தானத்தில் சுய சாரத்தில் (அவிட்ட நட்சத்திரம்) அமர்ந்து

உங்களுக்கு மேஷ லக்னம், தனுசு ராசி. லக்னாதிபதி மற்றும் ஆயுள் ஸ்தானாதிபதியான செவ்வாய்பகவான் லாப ஸ்தானத்தில் சுய சாரத்தில் (அவிட்ட நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தன் ஆட்சி வீடான விருச்சிக ராசியை அடைகிறார். ஆயுள் காரகரான சனிபகவான் லக்னத்தில் உச்சம் பெற்றுள்ள சூரியபகவானுடன் இணைந்து இருப்பதால் முழுமையான நீச்சபங்க ராஜயோகத்தைப் பெறுகிறார். அயன மோட்ச ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில் கேதுபகவான் இருப்பதால் இறுதிக்காலம் அமைதியாகக் கழியும். புத்திர ஸ்தானாதிபதி உச்சம் பெற்றிருப்பதால் வம்ச விருத்தி உண்டு. உங்கள் மனைவிக்கு துலாம் லக்னம் கன்னி ராசி. கர்மாதிபதியான சந்திரபகவான் பூர்வபுண்ணியாதிபதியான சனிபகவானுடன் இணைந்திருப்பது சிறப்பு. லக்னாதிபதி பாக்கிய ஸ்தானத்தில் சூரியபகவானுடன் இணைந்திருப்பதால் தந்தை வழி சொத்தில் பங்கு கிடைக்கும். ஆரோக்கிய ஸ்தானாதிபதி லக்னத்தையும் குடும்ப ஸ்தானாதிபதியையும் பார்வை செய்வதால் உடல் ஆரோக்கியம் இறுதிவரை சிறப்பாக அமையும். உங்கள் மகனுக்கு கன்னி லக்னம், கன்னி ராசி. களத்திர ஸ்தானாதிபதி உச்சம் பெற்று தைரியம், பூர்வபுண்ணியம் மற்றும் களத்திர ஸ்தானங்களைப் பார்ப்பது சிறப்பு. அவருக்கு இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் மனதிற்கு பிடித்த பெண் அமைந்து திருமணம் கைகூடும். எதிர்காலம், மணவாழ்க்கை சிறப்பாக அமையும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com